'அனுமன் போன்று உதவியுள்ளீர்கள்': ராமாயணத்தையும், சஞ்சீவி மூலிகையையும் சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு பிரேசில் அதிபர் கடிதம்
2020-04-09@ 11:24:29

பிரேசில் : பிரேசிலுக்கு ஹைட்ராக்சிகுளோரோகுயின் மூலப்பொருட்கள் ஏற்றுமதி செய்ய அனுமதி அளித்த இந்தியாவுக்கு அந்நாட்டு அதிபர் நன்றி தெரிவித்துள்ளார்.கொரோனா வைரஸ்சுக்கான மருந்து இதுவரை கண்டறியப்படாத போதிலும் மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுயின் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் நோயின் தாக்கம் சமூகபரவலை எட்டிய நாடுகள் இந்தியாவின் உதவியை நாடியுள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மருந்து கேட்டு மிரட்டல் விடுத்த நிலையில், பிரேசில் அதிபர் ஜைர் போல்சோனாரோ ராமாயணம் மற்றும் பைபிளை மேற்கோள்காட்டி கோரிக்கை விடுத்தார்.இந்நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரை தயாரிப்புக்கான மூலப்பொருட்களை பிரேசிலுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து நாட்டு மக்களுக்குத் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரேசில் அதிபர், உரிய காலத்தில் செய்த உதவிக்குப் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டார்.இதற்கு நன்றி தெரிவித்தும் பிரதமர் மோடிக்கு பிரசேசில் அதிபர் ஜேர் எம்.போல்சோனாரோ கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “கடவுள் ராமரின் சகோதரர் லட்சுமணன் மூர்ச்சையாகி போரில் விழுந்தவுடன், கடவுள் அனுமன் இமாலய மலைப்பகுதிக்குச் சென்று அரிய சஞ்சீவி மூலிகையைக் கொண்டு வந்து லட்சுமணனைக் காத்தார். அனுமன் செய்த உதவி போல் செய்துள்ளீர்கள். இறைத்தூதர் ஏசு, நோயுற்றவர்களை குணப்படுத்தி, பார்டிமுக்கு பார்வை வழங்கியதைப் போல் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதிக்கான தடையை விலக்கி உதவியுள்ளீர்கள்.கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இரு நாடுகளும் இணைந்து எதிர்கொள்வோம். இருநாட்டு மக்களின் ஆசிகளையும் பகிர்ந்து கொள்வோம். எங்கள் நாட்டுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கி ஆதரவு அளிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு மத்திய அரசுத் தரப்பில் அளித்த பதிலில், “இந்தக் கடினமான நேரத்தில் பிரேசிலுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் இந்திய அரசு சார்பில் வழங்கப்படும் என பிரேசில் அதிபருக்கு பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்கள், உதவிகளுக்கு இரு நாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து தகவல்களைப் பகிர்ந்து கொள்வார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகள்
அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு
ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!
இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்ச; நன்றி கூறிய பிரதமர் மோடி
அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது... திணறும் உலக நாடுகள்
இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்