அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி இரவு வரை திறந்திருந்த கடைகளுக்கு சீல்
2020-04-09@ 10:28:01

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே அரசின் ஊரடங்கு உத்தரவை மீறி இரவு வரை திறந்து வைத்திருந்த, 3 கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். கொரோனா வைரசின் அச்சுறுத்தல் காரணமாக, 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய தேவைகளான காய்கறி, மளிகை கடை ஆகியவைகள் பிற்பகல் 1 மணி வரை நடத்தி கொள்ளலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில், ஊத்துக்கோட்டை அருகே சூளைமேனி மற்றும் தாராட்சி பகுதிகளில் இரவு 8 மணி வரை மளிகை கடைகள் இயங்கி வருவதாக திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதுபோன்று விதிகளை மீறி திறக்கப்பட்டுள்ள கடைகளுக்கு சீல் வைக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் சூளைமேனி கிராமத்தில் ஆசாராம் (35), முத்துகிருஷ்ணன் (40) ஆகியோரின் மளிகை கடைகளுக்கும், தாராட்சி கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (33) என்பவரின் மளிகை கடை என 3 மளிகை கடைகளும் இரவு 8 மணி வரை இயங்கியதாக ஊத்துக்கோட்டை தாசில்தார் சீனிவாசன் சீல் வைத்தார். அப்போது, வருவாய் ஆய்வாளர் யுகேந்தர் உடன் இருந்தார்.
மேலும் செய்திகள்
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி: அச்சத்தை போக்க விழிப்புணர்வு பிரசாரம்
நாகர்கோவில் மாநகர பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வழங்கப்படுகிறதா?..மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகள் விடுதலை..!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம்தேதி ரதசப்தமி உற்சவம் : ஒரே நாளில் 7 ரதங்களில் சுவாமி உலா
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்