SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலாவதி மது விற்று காசு பார்க்கும் இலை நிர்வாகியின் தந்திரம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-04-09@ 00:29:34

‘‘மதுவிலக்கு இல்லாததால் ஏற்பட்ட விபரீதத்தை பார்த்தீர்களா...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ம். பலர் தங்கள் உயிரோடு விளையாடுகிறோம் என்பதே தெரியாமல் எதை குடித்தால் போதை வரும் என்று கண்டதை குடித்து ஐந்துக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் உயிரை விட்டுள்ளனர். ஒருவர் போலீசிடம் இருந்து தப்பிக்க தண்ணீரில் குதித்து வெளியே வரமுடியாமல் இறந்தேவிட்டார்... இதுதவிர பலரும் எப்போது வேலைக்கு போவோம் என்ற நிலைமாறி... எப்போது டாஸ்மாக் திறக்கும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுதான்... இன்றைய நிலை... இவர்களின் நிலையை பார்த்து பல பெண்கள் தத்தளிப்பதை பார்க்கலாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘குமரியில் மதுவிற்பனை தூள் பறக்குதாமே...’’  என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனாவால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளதால், குமரியில் கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை கொடி கட்டி பறக்கிறது. இதில் இலை தரப்பே ஈடுபட்டுள்ளதால் காக்கிகளின் கைகள் கட்டி வைக்கபட்டுள்ளதாக உயரதிகாரிகள் பேசிக்கிறாங்க. இதில் குடிமகன்களின் நிலைதான் பரிதாபம்... ஏன்னா... நாகர்கோவில் அருகே தோப்பில் சிலர் மது அருந்தினர். இது பற்றி அறிந்ததும் மதுவிலக்கு பிரிவு போலீசார் சென்று மது அருந்தியவர்களில் 2 பேரை பிடிச்சாங்க. அவர்கள் வைத்திருந்த மது பாட்டில் 2017 ல் தயாரிக்கப்பட்டதாம். காலாவதியான மது எப்படி வந்தது என பிடிப்பட்டவர்களிடம் கேட்க... டாஸ்மாக் கடை சூப்பர் வைசர் ஒருவரை கை காட்டினர். அவரை பிடிக்க போலீசார் சென்றபோது அவர் இலை தரப்பை சேர்ந்த முக்கிய பிரமுகர் என்பது தெரியவந்தது. அவரிடம் நைசாக விசாரிக்க அவர் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவரின் பெயரை கூறி, அவர் சொல்லித்தான் விற்பனை செய்தேன் என தெரிவித்துள்ளார். அந்த முக்கிய நிர்வாகியை போலீசார் தொடர்பு கொண்டு கேட்க எனக்கு எதுவும் தெரியாது என கூறி கை விரித்து விட்டார். இருப்பினும் டாஸ்மாக் ஊழியர் மீது  வழக்கு போட்டால், கட்சிக்கு கெட்ட பெயர் என்று மட்டும் நாசுக்காக சொன்னாராம். கடைசியில் குடிமகன்கள் 2 பேர் மீது மட்டும் வழக்கு போட்டு ஜாமீனில் விட்டுட்டாங்க. கடைசி வரைக்கும் காலாவதியான சரக்கு எப்படி சப்ளையானது என்பதை போலீசார் மறந்தே போயிட்டாங்களாம்.  இதற்காக பல ஆயிரங்கள் கைமாறியதாக காக்கிகள் மத்தியில் பேச்சு ஓடுகிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பூட்டுக்கு பெயர் ேபான ஊர்ல காக்கிகள் ஏன் நடுங்கறாங்களாம்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இந்த மாவட்டத்துல கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக, இரவு, பகல் பாராமல் போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வர்றாங்களாம்... இதுல 55 வயதை தாண்டிய போலீசார்தான் அதிகம் என்பதால், உடல் உபாதைகளோடு ரோந்து மற்றும் காவல் பணியை தொடர்றாங்களாம்... கொரோனா தொற்று முதியவர்களையே அதிகம் தாக்கும் ஆபத்திருப்பதாக கூறப்படும் நிலையில், தங்களுக்கு விடுப்பு அல்லது இலகுவான வேலை கொடுக்கும்படி மாவட்ட உயரதிகாரிக்கு கோரிக்கை வைச்சாங்களாம். அது நிறைவேறலையாம். காரணம் இம்மாவட்டத்தில் தொடர்ந்து கொரோனா பாதித்தவர்கள் அதிகரித்து வருவது போலீசாருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாம்... இதுல ஊரடங்கு மேலும் சில நாட்கள் நீடிக்கப்படலாம் என்ற நிலையில், அத்தனை போலீசாரும் ‘இப்பவே கண்ணை கட்டுதே’ என்ற பாணியில் பணி புரிவதால் பூட்டு மாவட்டத்துல, பாதுகாப்பு குளறுபடிகள் நிலவுதாம்... எனவே, மாவட்ட உயரதிகாரிக்கு பணி சுழற்சி, போதிய ஓய்வு வழங்க வேண்டுமென மாவட்ட போலீசார் தொடர்ந்து கோரிக்கை விடுக்கிறாங்களாம்... ஆனாலும், அவர் கண்டும் காணாமல் இருப்பதால் 55 வயதை கடந்த போலீசார் கொரோனா பீதியில இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ இன்னொரு காக்கி மேட்டர் சொல்லுங்களேன்...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவை சூலூர் காவல் நிலையத்தில் ஒரு ஏட்டு பணிபுரிகிறார். இவர், இக்காவல் நிலையத்தில் நீண்ட நாட்களாக நங்கூரம் பாய்ச்சி வருகிறார். இங்கே இன்ஸ்பெக்டர்கள் யார் பணிக்கு வந்தாலும், அவர்களுக்கு சில சூட்சுமங்களை சொல்லிக்கொடுத்து, அவர்களை தனது கைக்குள் போட்டுக்கொண்டு தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார். அதனால், இவரை கண்டாலே சூலூர் காவல் நிலையம் அலறுகிறது. இவர், கடந்த வாரம் பிற்பகலில், தடை உத்தரவை மீறி அங்குள்ள ஒரு பெட்ரோல் பங்கை திறக்கச்சொல்லி, தனது இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போடும்படி அங்குள்ள ஒரு ஊழியரை மிரட்டினார். ஆனால், அவரோ, ‘மதியம் 1 மணிக்கு மேல் பெட்ரோல் பங்க் திறக்க தடை உள்ளது, என்னால் முடியாது...’’ எனக்கூறினார். இதனால், ஆத்திரம் அடைந்த ஏட்டு, அந்த ஊழியரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று, நன்கு ‘கவனித்து’’’’ விட்டார். இதில், அவரது ஒரு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொது இடத்தில் ஏட்டு அடாவடித்தனமாக நடந்துகொண்டது, தனியார் பெட்ரோல் பங்க் ஊழியரை காவல் நிலையத்தில் சட்ட விரோதமாக அடைத்து வைத்து, தாக்கியது ஆகிய குற்றத்துக்காக அந்த ஏட்டை, ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து, மாவட்ட உயரதிகாரி உத்தரவிட்டார். ஆனால், அந்த ஏட்டு, 5 நாளில் மீண்டும் சூலூர் காவல் நிலைய பணிக்கு வந்துவிட்டார். இதைக்கேட்டு மாவட்ட உயரதிகாரியே அதிர்ந்து போய்விட்டாராம். ஏட்டுவின் ஆட்டத்தை பார்த்து, கோவை மாவட்ட காவல் துறையையே வியப்பில் ஆழ்ந்துள்ளதாக சக காக்கிகள் ேபசிக் கொள்கின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

 • korona-death19

  கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்