கொரோனா போன்ற கொடிய நோய்களை குணமாக்க புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
2020-04-09@ 00:18:39

சென்னை: கொரோனா போன்ற கொடிய நோய்களை குணமாக்க புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த எஸ்.மாதேஸ்வரன் என்ற ஓய்வு பெற்ற சுகாதார ஆய்வாளர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: உலகம் முழுவதும் கடுமையான பாதிப்பை கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சஞ்சீவி மூலிகை கூறுகள் மூலம் 'அபியாஸ் வைரஸ் கில்லர் 180' என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளேன். விஞ்ஞான ரீதியில் அதனை நிரூபிக்க தயாராக உள்ளேன். ஏற்கனவே அரசின் அனுமதியோடு எச்ஐவி குறித்து ஆய்வு செய்து எச்ஐவி பாதிப்புக்கு உள்ளாகியிருந்த மூன்று நோயாளிகளை குணப்படுத்தி உள்ளேன்.
எனவே, நான் கண்டுபிடித்துள்ள கொரோனா நோய்க்கான மருந்து குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விளக்கும் வகையில், அந்த நிபுணர் குழு முன்பு ஆஜராக அனுமதிக்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல்கள் டி.ராஜகோபால், சத்தியம் சி.சரவணன் ஆகியோர் ஆஜராகி, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருப்பதை அரசுக்கு எடுத்துரைக்க மனுதாரருக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று வாதிட்டனர்.
இதைக்கேட்ட நீதிபதிகள், கொரோனா போன்ற கொடிய நோய்களை ஒழிக்க புதிய கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிகளுக்கும் மத்திய அரசு வாய்ப்பளிப்பளிக்க வேண்டும். கண்டுபிடிப்புகளுக்கான உரிய நிதியும் ஒதுக்க வேண்டும். இந்த வழக்கில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தையும், மத்திய ஆயுஷ் துறையையும் சேர்க்க உத்தரவிடப்படுகிறது. வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என்று உத்தரவிட்டனர்.
மேலும் செய்திகள்
சசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்?: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.!!!
அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!
தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்