SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாங்கனி மாவட்டத்தில் கெத்து காட்டிய அதிகாரியை ஓடஓட விரட்டிய காக்கிகள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-04-08@ 00:53:41

‘‘போலீஸ் வழக்குக்கு பயந்து வீடு திரும்பிய அதிகாரி யாரு...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அதியமான் கோட்டை மாவட்ட  அதிகாரி ஒருவர் கடந்தவாரம் மாங்கனி நகரில் உள்ள வீட்டிற்கு வந்தார். மீண்டும் பணிக்கு திரும்பி செல்லும்போது, மாநகர காக்கிகள் அவரை சோதனை சாவடியில மடக்கிட்டாங்க. ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது, வெளியே செல்ல அனுமதி இல்லை என கறாராக சொன்னாங்களாம். நானும் ஒரு அரசு அதிகாரிதான். அரசு வேலையாத்தான் போறேன் என்று கெஞ்சி கேட்டும் விடலையாம். ஒரு கட்டத்துல வாக்குவாதம் முற்றிய நிலையில், அதிகாரியின் சட்டையை, காக்கிகள் பிடிச்சு தூக்கிட்டாங்களாம். அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி, உயரதிகாரிகளை செல்போனில் தொடர்பு கொண்டு விவரம் தெரிவிச்சாராம். ஆனால் எதிர்முனையில் பேசிய அதிகாரிகளோ, உங்கள் மீது கேஸ் போடவேண்டி வரும் என்று மிரட்டும் வகையில் சொன்னாங்களாம். ரொம்ப அடம்பிடிச்சா நாங்களே நேரடியா சேலம் விவிஐபியிடம் பேசுவோம்.. வழக்கு இன்னும் ஸ்டிராங் ஆகிடும்னு சொன்னாங்களாம். நொந்து போன அதிகாரி, போலீஸ் வழக்கு போட்டா சஸ்பெண்ட், நோட்டீஸ்னு தேவையில்லாத பிரச்னை வரும்னு அந்த இடத்தை காலி  செய்தார்... அதை பார்த்த ெபாதுமக்கள், கெத்து காட்டிய அதிகாரியை காக்கிகள் தைரியமாக ஓட ஓட விரட்டியதை பாராட்டினர்... ’’என்றார் விக்கியானந்தா.
‘‘தஞ்சையில் ரேஷன் ஊழியர்கள் வேலையே வேண்டாம்னு போயிடலாம்னு நினைக்கிறாங்களாமே, ஏன்...’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் 1000 டோக்கன் வழங்கும் போதும் கடையில் அமர்ந்தும் அந்தந்த பகுதி இலைகட்சி நிர்வாகிகள் ஆயிரத்தை தங்களது பாக்கெட்டில் இருந்து தருவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குவதால் பிற கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவிச்சாங்களாம். இதனால் ரேஷன் ஊழியர்கள் சிலர் இலை கட்சியால எங்களுக்கு பொதுமக்கள், மற்ற கட்சிகள் மத்தியில் கெட்டப் பெயர் ஏற்படுது... இதே நிலைநீடித்தால் வேலையே வேண்டாம்னு போகும் நிலை ஏற்படும்னு புலம்பறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘திருவண்ணாமலையில் ஊரடங்கை பயன்படுத்தி வசூல் வேட்டை நடக்குதாமே, உண்மையா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தி.மலை நகர்ல புட் சேப்டி டிபார்ட்மென்ட் அதிகாரிங்க, நல்ல வசூல் வேட்டை நடத்தி வர்றாங்க. சமீபத்துல ஒரு கடையில காலாவதியான பொருள் விற்பனை செய்யறாங்கனு பொதுமக்கள் புகார் சொல்லியிருக்காங்க. புகார் சொன்ன உடனே மாவட்ட புட் சேப்டி ஆபீசரும், கைலாசமான லோக்கல் புட் சேப்டி ஆபீசரும் ரெய்டு போனாங்களாம். ஆனால் கடை உரிமையாளர் மீது எந்த ஆக்‌ஷனும் எடுக்கலையாம். அதுக்காக கடை உரிமையாளர்கிட்ட சம்திங் வாங்கிக்கிட்டாங்களாம். இந்த ரெய்டுக்கு அப்புறமா அந்த கடையில இருந்து ஆபீசருங்களுக்கு சம்திங்  கரெக்டா போயிடுதாம். இதுபோலவே மாவட்டம் முழுக்க ரெய்டுன்ற பெயர்ல நல்ல சம்திங் வாங்கி வர்றாங்களாம். இதை பார்த்த அதே துறையில் உள்ள சில அதிகாரிகள்... கொரோனாவிடம் இருந்து கூட மக்களை காப்பாற்றிவிடலாம்.. இந்த காலாவதி பொருட்களை சாப்பிட்டு மக்களை யார் காப்பது என்று கேள்வி எழுப்புகின்றனர்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கோவையில எதுக்கும் பயப்படாத டாஸ்மாக் கடை ஒன்று இருக்காமே....’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கோவையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை என்பது பெயரளவில் தானாம். கோவை கணபதி சத்தி ரோடு எப்.சி.ஐ. குடோனுக்கு செல்லும் வழியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் ரொம்பவே விவரமாக சரக்கு விற்கிறாங்களாம். அதாவது, இந்த கடைக்கு முன்பாக பெரிய பூட்டு தொங்க விடப்பட்டுள்ளது. ஆனால், பின்புறமாக சரக்குகள் வெளியே எடுக்கப்பட்டு, அருகில் உள்ள ஒரு பஞ்சர் கடையில் குவிக்கப்படுகிறது. அங்கிருந்து கள்ளத்தனமாக சரக்குகள் மூன்று மடங்கு கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. ரேட் ஓவர்... ஆனாலும், சரக்கு வாங்க துடிக்கிறார்கள் குடிமகன்கள். ‘துட்டு வீசு... சிக்கி விடாதே... ஓடிவிடு...’’ என்ற டயலாக் இந்த பஞ்சர் கடையில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கண் துடைப்பு ஆய்வு நடத்தி மக்களின் உயிருடன் விளையாடும் அதிகாரிகள் யாரு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘நாகர்கோவில் பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை நடைபெறுவதாக வந்த புகார்களை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் மீன்துறை அதிகாரிகள் பார்வதிபுரம் பகுதியில் மீன் விற்பனை நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். உணவு பொருட்களின் தரத்தை அறியவும், கலப்படத்தை தடுக்கவும் சுகாதாரத்துறையில் இருந்து தனியே உணவு பாதுகாப்பு துறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் உணவு பாதுகாப்பு துறையிடமோ மீன்கள் கெட்டுப்போனதா என்பதை கண்டறிய உடனடி பரிசோதனைக்கான உபகரணங்கள் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. அவர்கள் மீன்துறை அதிகாரிகளின் வருகைக்காக காத்திருந்தனர். முடிவில் மீன்துறை அதிகாரிகளும் வந்து மீன்களின் செவிளை பார்த்து சிகப்பாக உள்ளதா, கறுப்பாக உள்ளதா என பார்த்து இது நல்ல மின், இது கெட்ட மீன் என்று வகைப்படுத்திவிட்டு சென்றுவிட்டனர். அதிகாரிகளின் இந்த செயல் அந்த பகுதியில் மீன் வாங்க வந்திருந்தவர்களை கடும் அதிர்ச்சியடைய வைத்தது. மீன்களில் பார்மலின் உள்ளிட்ட ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகிறது என்ற புகார்கள் இருந்து வருகிறது. தற்போது கொரோனா அச்சத்தில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். குமரி மாவட்டம் மீன்கள் அதிகம் விற்பனைக்கு வருகின்ற மாவட்டம் இருப்பினும் தரமான மீன்களை பரிசோதனை செய்ய எந்த கருவிகளும் அதிகாரிகள் வசம் இல்லாது இருப்பதும், அதிகாரிகள் இதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டு வருவதும் சமுதாய பொறுப்பின்மையை காட்டுகிறது என்கின்றனர் மீன் வாங்க வந்தவர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

 • korona-death19

  கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்