வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் இனி ஒரு நபருக்கு மட்டுமே ஷேர் செய்ய முடியும் : கொரோனா குறித்த வதந்திகளை தடுக்க புதிய கட்டுப்பாடு
2020-04-07@ 13:35:02

டெல்லி : கொரோனா தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் இனி ஒரு நபருக்கு மட்டுமே ஷேர் செய்ய முடியும்.வாட்ஸ் ஆப்பில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் இனி 5 நபர்களுக்கு அனுப்ப முடியாது.
*கொரோனா வைரஸை சமாளிப்பது ஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் அதுதொடர்பான வதந்திகளை சமாளிப்பது என மத்திய,மாநில அரசு போராட்டங்களை நடத்தி வருகிறது.
*பொதுமக்களுக்கு கடுமையான பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய இந்த வதந்திகளை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு எத்தனையோ நடவடிக்கை எடுத்தாலும், அதையும் மீறி தொடர்ச்சியாக தேவையில்லாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகிறது.
*குறிப்பாக வாட்ஸ் ஆப், முகநூல்,ட்விட்டரில் தான் இந்த மாதிரியான தேவையில்லாத தகவல்கள் அதிகமாக பகிரப்படுகிறது.
*இதனால் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து நிறைய அச்சுறுத்தல் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது வாட்ஸ் அப் புதிய கட்டுப்பாடு கொண்டுவந்துள்ளது.
*அதாவது ஒரு வாட்ஸ் ஆப் குழுவில் வரும் பெரிய கட்டுரை போன்ற மெசேஜ், குறுஞ்செய்திகள் இனி தனி நபர் ஒருவருக்கு மட்டும் தான் அனுப்ப முடியும்.இதற்கு முன்பு 5 பேருக்கு அனுப்பலாம் என்று இருந்த கட்டுப்பாடு தற்போது ஒருவருக்கு மட்டுமே ஒரே சமயத்தில் அனுப்பலாம் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த வதந்திகளை கட்டுப்படுத்தமுடியும் என்று நம்பப்படுகிறது.
மேலும் செய்திகள்
மேற்குவங்கத்தில் 200 சீட் இலக்கு நிர்வாகிகளுக்கு அமித்ஷா அறிவுரை
பிறந்த நாளை கொண்டாட துப்பாக்கியால் ‘கேக்’ வெட்டியவர் கைது
ஒரே நேரத்தில் லட்சக்கணக்கானோர் பதிவிறக்கம் : முடங்கியது ‘சிக்னல்’ செயலி
1966 ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக வெளிநாட்டு தலைவர் பங்கேற்காத முதல் குடியரசு தின விழா : 25,000 பேர் மட்டுமே பங்கேற்பு
குறுகிய காலத்தில் தடுப்பூசி கண்டுபிடித்து சாதனை படைத்த இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு தலை வணங்குகிறேன் : பிரதமர் மோடி பெருமிதம்
உலகின் மிகப் பெரிய கொரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை இந்தியாவில் தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்