SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முட்டையில் நடக்கும் கோஷ்டி அரசியல் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2020-04-07@ 03:15:18

‘‘கல்லா கட்டும் நம்ம அதிகாரிகளை பார்த்து கொரோனாவே மிரண்டு ஓடும்போல...’’ என்று சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.
‘‘கொரோனா வைரஸ் கண்டறிய லேப் டெக்னீசியன்கள் மூவாயிரம் பேரை புதுசா நியமிச்சாங்க. இதுக்கான அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வந்து இருக்கு. ஆனால் எந்த மாவட்டத்தில் எந்த இடத்தில் நியமிப்பது என்பதில் தான் கல்லா கட்டும் வேலை தொடங்கி இருக்காம். அதாவது, தங்களோட சொந்த மாவட்டத்துல, வேண்டப்பட்ட இடத்துல போஸ்டிங் போட, பலமான கவனிப்பு கட்டாயமாம். குறிப்பா, 8 ஆயிரம் சம்பளத்துல வேலைக்கு சேர்ந்திருக்குற லேப் டெக்னீசியன்ங்ககிட்ட, அந்தந்த மாவட்ட அதிகாரிங்க, கவனிப்பு எதிர்பார்த்து, மாறுதல் கொடுத்துட்டு இருக்காங்களாம். அப்படி கொடுக்க எதுவும் இல்லாதவங்கள 300 கிலோ மீட்டர் தூரத்துல உள்ள மாவட்டத்துக்கு தூக்கியடிக்கிறாங்களாம். அப்புறம் தெரியாத இடத்துல டூட்டி போட்டு உடனே சேரச் சொல்லி பிரஷராம். தெரியாத ஊர்ல... வீடு வாடகை எடுத்து தங்கி எப்படி வேலை செய்வதுன்னு பலரும் கேட்ட பணத்தை கொடுத்துட்டு சொந்த மாவட்டத்தில் தெரிந்த இடத்தில் சேர்ந்துடறாங்க. பணம் கொடுக்காதவங்க பாடு கஷ்டம்தான். அதிகாரிகளின் இந்த கல்லா கட்டும் வேகத்தை பார்த்தா வேகமாக பரவும் கொரோனா கூட விட்டால் போதும் என்று தப்பித்து ஓடும் போல என்று அந்த துறை பணியாளர்களே தலையில அடிச்சுக்குறாங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘முட்டையில என்ன சிக்கல் விக்கி...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘முட்டைக்கு புகழ்பெற்ற மாவட்டத்தில் முட்டை உற்பத்தியாளர்கள் இரண்டு கோஷ்டியாக நின்று முட்டி மோதிக் கொள்வது தான் ஹாட்டாபிக். பெரிய பண்ணையாளர்களை உள்ளடக்கிய 2 சங்கங்களின் நிர்வாகிகளும் தனி ஆவர்த்தனம் செய்யுறாங்க. முட்டை லாரிகளை இயக்க, கலெக்டரிடம் அனுமதி வாங்குவதற்கு கூட, இரண்டு பிரிவாகத்தான் வர்றாங்களாம். சிக்கன், முட்டை சாப்பிடுவதால் கொரோனா பரவும் என்ற பீதியை போக்க, அரசுத்துறை பல்வேறு நடவடிக்கை எடுக்குதாம். ஆனால் முட்டை மாவட்டத்தின் 2சங்கமும், தங்களுக்கு இதில் தொடர்பில்லாதது போல், குறட்டை விட்டு தூங்குதாம். ஆனால் எப்படியாவது தங்களை பற்றி தினமும் நியூஸ் வரவேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்காங்களாம். இதற்காகவே மீடியாக்கு வாரம் 14 முட்டை, ஒரு கிலோ கோழிக்கறியை ஒரு ஆண்டுக்கு இலவசமாக தருகிறோம் என்று வாட்ஸ் அப்பில் வைரல் பரப்புறாங்க...’’ என்று சொல்லி சிரித்தார் விக்கியானந்தா.
‘‘மஞ்சள் மாவட்டத்தில் மதுவிலக்கை விலக்கிட்டாங்க போல... மதுவிலக்கு போலீசார் செம கலக்‌ஷன்ல மிதக்கறாங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.
 ‘‘மஞ்சள்   மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் ஊரடங்கால் மூடப்பட்டுள்ள நிலையில்,   சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. இலை தரப்பினர் பெட்டி, பெட்டியாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல்   விலைக்கு விற்பனை செய்யறாங்க. மற்ற போலீசார் கொரோனா வைரஸ் தொற்று   தடுப்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள நிலையில் மதுவிலக்கு போலீசார்   கல்லா கட்டுவதில் தீவிரமாக இருக்காங்க... விசாரிச்சா. இவ்வளவு நாள் நாங்க ஒதுங்கி இருந்ேதாம். ஸ்டேஷன் போலீசார் கல்லா கட்டினாங்க... இப்போது எங்க டர்ன்னு சொல்றாங்களாம்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு   பவானியில் சட்டவிரோதமாக மது விற்றதாக ஒருத்தரை கைது செஞ்சாங்க. ஆனால்   டாஸ்மாக் பணியாளர்களிடம் கணிசமான தொகையை வாங்கிக் கொண்டு கோபி  மதுவிலக்கு  போலீசார் அந்த நபரை விட்டுட்டாங்க. இதனால், மாமூல் பணத்தை குடிமகன்களின் தலையில் இறக்கிவிட்டாராம். மேலும்,  கள்ளச்சாராய விற்பனையும் களைகட்ட ெதாடங்கிவிட்டது.  எஸ்பி நடவடிக்கை எடுப்பாரா என நேர்மையான காக்கிகளின் கேள்வியாக இருக்கிறது...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொரோனா வந்ததால் பல மருத்துவமனையில் சாதாரண நோயாளிகள் பாடு திண்டாட்டமாகி விட்டதாமே..’’
‘‘கொரோனா பரவத் தொடங்கியவுடன் மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் சாதாரண நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டாம். ஐசியூவில் உள்ள நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்தால் போதும் என்று உத்தரவிட்டார்களாம். இதை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா கடுமையாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டாராம். இதனால் அனைத்து மருத்துவமனைகளிலும் சாதாரண நோயாளிகள் அனுமதிக்கப்படவில்லை. மேலப்பாளையம் பகுதியில் நிறைய கர்ப்பிணிகள், டயாலிசிஸ் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள். பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாம். ஆனால் கலெக்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இந்த தகவலை சங்கரன்கோவில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வியிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அவருடன் நெல்லை ராஜ்யசபா எம்பி விஜிலா, முன்னாள் மாவட்டச் செயலாளர் பாப்புலர் முத்தையா ஆகியோர் இருந்தனர். அவர்கள் 3 பேரும் உடனடியாக முதல்வர் எடப்பாடியிடம் புகார் செய்தார்களாம். அடுத்த நிமிடம் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ், அவர்களின் செல்போனுக்கு வந்து விட்டாராம். விஷயத்தை கேள்விப்பட்டதும், கலெக்டரை தொடர்பு கொண்டு மருத்துவமனைகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கூறியதோடு, இதை அப்படியே அரசாணையாக பிறப்பித்து, அதை எம்பிக்கு அனுப்பிவிட்டாராம். இவை அணைத்தும் 2 மணி நேரத்தில் நடந்ததாம். இதனால் மாநிலம் முழுவதும் உள்ள பல நோயாளிகள் சிகிச்சை பெற வழி கிடைத்தது’’ என்றார் விக்கியானந்தா.     

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • alangaa_jaallii

  அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்

 • stalinnnraa

  மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!

 • 16-01-2021

  16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • 14-01-2021

  14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

 • master13

  9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்