கோப்புகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கும் ‘பவர்புல்’ பெண்மணி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
2020-04-04@ 00:18:47

‘‘என்ன விக்கி நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே போகிறதே’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘இரண்டே விஷயம்தான். ஒன்று பலர் தாங்களாகவே வந்து கொரோனா வைரஸ் ெதாற்று உள்ளதா என்று பார்த்து தங்களையும் தேசத்தையும் காக்க முயன்றவர்கள்... மற்றொன்று சமூக இடைவெளி காக்க மறந்து வைரஸ் பரப்பியவர்கள்... இப்போது கூட ஆயிரம் ரூபாய் வாங்க மக்களிடம் ஆர்வம் குறையவில்லை. இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்துவது கஷ்டம் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கொரோனா அச்சத்துடனேயே போலீசார் வேலை செய்யறாங்களாமே...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வெளிமாநிலம் சென்றுவந்தவர் என்ற தகவலை வைத்து தொற்று நோய் சந்தேகத்தில் தனிப்படை போலீசார் அவரை தேடினர். அவரை தனிப்பிரிவு போலீஸ் எஸ்ஐ உள்ளிட்ட 3 பேர் முதன் முதலில் கண்டுபிடித்து 3 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். கொரோனா அச்சம் தெரியாமல் அவரது உடமைகளை போதிய பாதுகாப்பு கவசம் இன்றி தனிப்படையினர் சோதனையிட்டனராம். பின்னர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனராம். தற்போது வெளிமாநிலம் சென்றுவந்து மருத்துவமனையில் உள்ள நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாம். இதனால் உஷாரான தனிப்படையில் சிலர் உயரதிகாரிகள் பரிந்துரையுடன் கோரன்டைன் வார்டு செல்லாமல் தப்பித்துவிட்டார்களாம். ஆனால் கணக்குக்கு அந்த தனிப்படையில் இருந்த ஒரு போலீஸ்காரரை மட்டும் உயர் அதிகாரிகள் தனிமையில் இருக்க உத்தரவிட்டுள்ளனராம். ஆனால் தனிப்படையில் இருந்த போலீஸ் அதிகாரி மற்றும் பிற போலீசார் வழக்கம் போல் பணியில் இருக்காங்க. இதனால் கொரோனா நபரை பிடித்தவர்களுடன் வேலை செய்யும் பிற போலீஸ்காரர்கள் அச்சத்துடனே வேலை செய்கிறார்களாம். ஒன்றுக்கு பத்துமுறை சானிடைசர் பயன்படுத்தியும், மாஸ்க் கழற்றாமலும் இருக்கிறார்களாம்... இந்த விஷயம் மெல்ல கசிந்து கலெக்டர் காதுக்கு சென்றுள்ளதாம். விரைவில் காவல் துறையில் மேலும் சிலர் கோரன்டைன் வார்ட்டில் சேர்க்கப்படுவார்கள் என்கிறார்கள் காக்கிகள்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘அல்வா மாவட்டத்துல கொரோனா தாக்கம் அதிகம் இருப்பதால் என்ன நிலைமை ஏற்பட்டு இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘ ெகாரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் போக்குவரத்து நிர்வாகம் வழக்கம்போல ஊழியர்களின் சம்பளத்தில் விளையாடி உள்ளது. அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தங்களது ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்க வலியுறுத்தி கடந்த மார்ச் 10, 11 தேதிகளில் சொந்த விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் பங்ேகற்றனர். இந்த கோரிக்கையை அரசும் ஏற்று, மார்ச் 20ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதி அளித்தது. ஆனால் தற்போதைய சூழ்நிலை கருதி பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு சில அரசு போக்குவரத்து கழகங்களில் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் மார்ச் மாத ஊதியத்தில் மார்ச் 10, 11 தேதிகள் மற்றும் வார விடுமுறை என மூன்று நாட்களுக்கு ஊதிய பிடித்தம் செய்ததாக புகார் எழுந்துள்ளது. நெருக்கடியான காலகட்டத்தில் அதிகாரிகளின் இந்தப் பழிவாங்கும் நடவடிக்கையை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனங்கள் கண்டித்துள்ளது. இந்த 3 நாள் ஊதியத்தை வழங்க கேட்டும் பிடித்தம் செய்த அதிகாரிகள் எதையும் கண்டு கொள்ளவில்லையாம். இதனால் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அடுத்த கட்ட போராட்டத்தை கொரோனா முடிவுக்கு பிறகு யோசிக்கலாம்... அதுவரை அடக்கி வாசிங்க என்று சங்க உறுப்பினர்களுக்கு தலைவர்கள் அறிவுரை வழங்கி இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரியில எல்லோரும் ரொம்ப உஷாராக இருக்காங்க போல...’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கொரோனவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி மாநிலத்துக்கு மத்திய அரசிடமிருந்து நிதி பெற்று தருமாறு அனைத்து கட்சிகளும் பவர்புல் பெண்மணியிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கொரோனா பீதியில் கிடக்கிறாராம் பவர்புல்பெண்மணி. ஒவ்வொரு வாரமும் அதிகாரிகள் புடை சூழ ஆய்வுக்கு செல்கிறவர். இப்போது தன் மாளிகையிலயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளாராம். மக்கள் சந்திப்புக்கு தடை போட்டதோடு, போனில் புகார்களை சொல்லுங்க.. நேரில் வராதீங்கனு சொல்லிட்டாராம். காரணம் சமூக இடைவெளி என்கிறாராம். சாமியானவர் நடத்திய மக்கள் பிரதிநிதிகள் கூட்டத்தில் சமூக இடைவெளி இல்லை என கமென்ட் அடித்து சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். கொரோனாவில் பவர்புல் பெண்மணி காணாமல் போய்விட்டதாக சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறது ஒரு தரப்பு... இதற்கிடையே கொரோனா அச்சத்தால் பவர்புல் பெண்மணி தன் அனுமதி கோரி வரும் கோப்புகளை கண்டு கூட அலறுகிறாராம். கோப்புகளை மிக கவனமாக கையாளுமாறு தன் ஊழியர்களுக்கும் உத்தரவு போட்டுள்ளாராம். மேலும் முதல் மாடியில் இரும்புக்கதவை தாண்டி வெளி நபர்கள் உள்ளே செல்ல அனுமதியில்லையாம். அங்குள்ள டேபிளில் கோப்புகளை வைத்து விட வேண்டும். அதில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே பவர்புல் பெண்மணிக்கு செல்லுமாம். அதன்பிறகு ஆய்வு செய்து உத்தரவில் கையெழுத்து போடுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது எந்த அளவு உண்மை என்பதை பவர்புல் பெண்மணி அலுவலக ஊழியர்கள் சொன்னால்தான் உண்டு என்கின்றனர் சாமியின் ஆதரவாளர்கள்...’’ என்றார் விக்கியானந்தா.
Tags:
பீட்டர் மாமாமேலும் செய்திகள்
பணம் வேண்டாம்னு லேப்டாப் முதல் காய்கறி வரை லஞ்சமாக கேட்கும் காக்கி அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
எம்ஜிஆர் சிலைக்கு மாலை போட்ட சிறைப்பறவை பேரவையினர் பற்றி அறிக்கை தயாரிக்கும் உளவு துறை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
தேர்தலில் ஜெயிக்காவிட்டால் மாவட்ட செயலாளர் பதவி பறிபோகும் என்ற இலை கட்சியின் எச்சரிக்கை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
மைக் போலீஸ் அதிகாரியை கண்டு போலீசாரே அலறும் நிஜக்கதையை சொல்கிறார்: wiki யானந்தா
ஆண் அதிகாரிகளையே அசர வைத்து கல்லா கட்டும் மூன்று பெண் அதிகாரிகளின் கதையை சொல்கிறார்: wiki யானந்தா
பதவியை வைத்து பணம் சம்பாதித்தால் மீண்டும் பதவிக்கு வரமுடியாதுன்னு முன்னாள் அமைச்சர் கொந்தளித்ததை சொல்கிறார்: wiki யானந்தா
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்