சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் காய்கறி, மளிகை பொருட்களை ஒரே நேரத்தில் வாங்க குவியும் மக்கள்: கொரோனா பாதிப்பு அதிகரிக்குமா என அச்சம்
2020-04-02@ 00:23:50

சென்னை: கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக பொதுமக்கள் காய்கறி, மளிகை பொருட்கள் வாங்க சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அரசு அறிவுரை வழங்கியது. ஆனால், மக்கள் அரசின் உத்தரவை கண்டுகொள்ளவில்லை.
இதையடுத்து தமிழக அரசு கடந்த 29ம் தேதி முதல் காய்கறி, மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் 2.30 மணி வரை தான் திறக்க வேண்டும் என்று அதிரடி கட்டுப்பாடு விதித்தது. மேலும், கடைகள் முன்பு ஒரு மீட்டர் இடைவெளியில் போட்டுள்ள கட்டத்தில் நின்று காய்கறி, மளிகை வாங்க வேண்டும் என்று போலீசார் அறிவுரை வழங்கினர்.
ஆனால், அந்த கட்டத்தில் நிற்காமல் வழக்கம்போல முண்டியடித்தும் இடித்துக் கொண்டும் பொருட்களை வாங்கி சென்றனர். மேலும், சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளுக்கு உள்ளாட்சி அமைப்புகள் எச்சரிக்ைக விடுத்துள்ளது. இதற்கு பயந்து கடைக்காரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுமாறு பொதுமக்களை அறிவுறுத்திய நிலையிலும், அதை காது கொடுத்தும் கேட்பதில்லை என்று கூறப்படுகிறது. பலரும் அதை கடைபிடிக்காமல் வழக்கம் போல் கூட்டமாக நின்றபடி பொருட்களை வாங்கி செல்கின்றனர். ஆனால், பொதுமக்கள் காலையிலேயே காய்கறி மற்றும் மளிகை கடைகளில் பொருட்களை வாங்க கூட்டம், கூட்டமாக வருகின்றனர். அவ்வாறு அவர்கள் ஒரே நேரத்தில் கூட்டமாக கூடுவதால் சமூக இடைவெளி என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
மேலும், அனைத்து நகர் மற்றும் கிராமப்புற பகுதிகளில் மார்க்கெட்டுகளில் போதிய இட வசதி இல்லை என்பதாலும், கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பேருந்து நிலையங்கள் காய்கறி சந்தைகளாக மாற்றப்பட்டுள்ளன. அங்கும் கட்டம் கட்டி பொருட்கள் வரிசையில் நின்றபடி பொருட்களை வாங்குமாறு அறிவுரை வழங்கப்படுகிறது. ஆனால், கொரோனா பாதிப்பை உணராமல் பொதுமக்கள் முண்டியடித்த படி நிற்கின்றனர். தற்போதைய சூழ்நிலையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அரசு கூறும் அறிவுரையை பின்பற்றாமல் தொடர்ந்து பொதுமக்கள் அலட்சியம் காட்டி வரும் நிலையில் கொரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
சசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்?: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.!!!
அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!
தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்