நம் உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தங்கள் உயிரை பணயம் வைக்கிறார்கள்: ஏ.ஆர்.ரகுமான் உருக்கம்
2020-04-02@ 00:06:07

சென்னை: இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நேற்று தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தகவல்: எந்த சுயநலமும் இல்லாமல் மருத்துவமனைகளில் தைரியமாக பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் நன்றி. இந்த மோசமான தொற்று பரவிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவர்கள் இதை கையாள எவ்வளவு தயாராக இருக்கிறார்கள் என்று பார்க்கும்போது மனசு நிறைந்துவிட்டது. நம் உயிரை காப்பாற்ற அவர்கள் உயிரை பணயம் வைக்கின்றனர்.
உலகையே தலைகீழாக மாற்றியுள்ள இந்த கண்ணுக்கு தெரியாத எதிரிக்கு எதிராக, நாம் அனைவரும் நமது வித்தியாசங்களை மறந்து ஒன்றிணைய வேண்டிய நேரம் இது. மனிதம், ஆன்மீகம் ஆகியவற்றின் அழகை செயலில் கொண்டு வரும் நேரம் இது. நமது பக்கத்து வீட்டில் இருப்பவர்களுக்கும், மூத்த குடிமக்களுக்கும், வசதி வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கும், புலம்பெயர்ந்த பணியாளர்களுக்கும் உதவி செய்வோம். கடவுள் உங்கள் மனதில் இருக்கிறார். அதுதான் மிகப் பரிசுத்தமான கோயில். மத வழிபாட்டு இடங்களில் கூடி குழப்பத்தை ஏற்படுத்த இது நேரம் அல்ல. அரசாங்கத்தின் அறிவுரையை கேளுங்கள்.
தனிமைப்படுத்திக் கொண்டு சில வாரங்கள் இருந்தால், பல வருடங்கள் ஆயுள் கிடைக்கும். இந்த தொற்றைப் பரப்பி சக மனிதருக்கு தீங்கு ஏற்படுத்தாதீர்கள். இந்த கிருமி உங்களிடம் இருக்கிறது என்பதைக்கூட உங்களுக்கு எச்சரிக்காது. எனவே, உங்களுக்கு தொற்று இல்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டாம். இது புரளிகளை பரப்பி இன்னும் பதற்றத்தை அதிகரிக்கும் நேரம் அல்ல. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
சசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்?: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.!!!
அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!
தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்