கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தை நலமாக உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
2020-03-31@ 16:52:02

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் அடிப்படையில் நாடு முழுவது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களை அடையாளம் காணப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் 17 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் 3,018 வென்டிலேட்டர்களும் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தற்போது வரை தமிழகத்தில் கோரனாவால் 74 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 6 பேர் குணடைந்து வீடு திரும்பினர். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர்;
* கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.
* ஒருபுறம் கொரோனா தடுப்புப்பணிகள்; மறுபுறம் அதை எதிர்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
* உலக சுகாதார அமைப்பு, மத்திய குழுவினர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
*வீடுதோறும் சென்று ஆய்வு நடத்தி வருகிறோம்; உலக சுகாதார நிறுவனம் நம்முடைய கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டியுள்ளது
* தமிழகம் முழுவதும் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று சிகிச்சைக்கு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
* தமிழகம் முழுவதும் கொரோனாவுக்கு தனி சிகிச்சை மருத்துவமனைகள் உருவாக்கப்படும்.
* ராஜீவ் காந்தி, ஸ்டான்லி மருத்துவமனைகளிலும் கொரோனா தனிப்பிரிவுகள் ஏற்படுத்தப்படும்
* அரசு ஸ்டான்லி மருத்துவனையில் கொரோனா பரிசோதனை நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
*கொரோனாவுக்காக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* நோயாளிகளுக்கு மனஉறுதியை கொடுப்பதற்கான ஆலோசனையை உளவியல் மருத்துவர்கள் வழங்குகிறார்கள்.
*தமிழகத்தில் எந்த நோயாளியும் வெண்டிலேட்டர் கருவியில் வைக்கவில்லை.
* கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தை நலமாக உள்ளது.
* ஓய்வு பெற்ற மருத்துவ பணியாளர்களை பணி நீட்டிப்பு செய்த முதலமைச்சருக்கு நன்றி எனவும் கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
சசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்?: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.!!!
அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!
தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்