நேரில் சந்திக்க முடியாததால் நடிகர் ராணாவுடன் வீடியோ காலில் பேசிய திரிஷா: காதல் தொடர்கிறதா?
2020-03-31@ 00:27:12

சென்னை: நடிகை திரிஷா, தெலுங்கு நடிகர் ராணா இடையே காதல் என சில ஆண்டுகளுக்கு முன் தகவல் பரவியது. பிறகு இவர்கள் பிரிந்துவிட்டதாகவும் கூறப்பட்டது. நீண்ட காலமாக இவர்கள் தொடர்பில் இல்லை என்றே சினிமா வட்டாரங்களில் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் ராணாவுக்கு வீடியோ கால் செய்து பல மணி நேரம் பேசியிருக்கிறார் திரிஷா. ஊரடங்கு உத்தரவு காரணமாக தன்னை திரிஷா தனிமைப்படுத்தி உள்ளார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவிலும் இதை தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று ராணாவுக்கு வீடியோ கால் செய்து பல மணி நேரம் அவரிடம் பேசியுள்ளார். இந்த தகவலை அவரே தனது சமூக வலைத்தளத்திலும் தெரிவித்து இருக்கிறார்.
இதையடுத்து இவர்கள் காதல் இன்னும் முறியவில்லை என்றும் நேரில் சந்திக்க முடியாததால் அவர் வீடியோ காலில் பேசியிருக்கிறார் என்றும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. ராணாவை தொடர்ந்து தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனிடமும் வீடியோ காலில் திரிஷா பேசினாராம். இவருடன் திரிஷாவுக்கு நல்ல நட்பு இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகள்
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா...! தமிழகத்தில் மேலும் 479 பேருக்கு பாதிப்பு: 490 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்: சுகாதாரத்துறை அறிக்கை
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவப்பட்ட பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட்: துணை முதலமைச்சர் ஒபிஎஸ் பாராட்டு
வேலை இல்லை.. திருமண ஏக்கம்.. ஆசிட் குடித்து இன்ஜினியர் சாவு
அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி தேமுதிகவுக்கு 10 தொகுதி தான்... அதிமுக முடிவால் விஜயகாந்த் விரக்தி
சிறப்பு டிஜிபியாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார்: சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவு..!
சட்டப்பேரவையில் தாக்கல் செய்த வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல்..!!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!