ஊரடங்கு உத்தரவை மீறிய கிராமங்களுக்கு சீல் வைப்பு: அதிகாரிகள் அதிரடி
2020-03-29@ 10:50:46

திருத்தணி: 144 தடை உத்தரவை மீறிய கிராமங்களுக்கு போலீசார் மற்றும் அதிகாரிகள் சீல் வைத்தனர். திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட வீரகநல்லூர் ஊராட்சி இஸ்லாம் நகர் பகுதியில் 1,100 குடும்பங்கள் வசிக்கின்றன. இதேபோல் சாத்திரம், ஜெயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட முஸ்லிம் நகரில் மொத்தம் 750 வீடுகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலானோர் காய்கறி நறுக்கும் கத்தியை கூர்மை தீட்டும் தொழில் செய்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கேரளா மாநிலத்திற்கு சென்று அந்தப் பகுதியில் தொழில் செய்பவர்கள். இந்நிலையில், கேரளாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்தது வருவதாக கூறப்படுகிறது. எனவே இஸ்லாம் நகர் மற்றும் முஸ்லிம் நகர் மக்கள் கேரளா சென்று திரும்பியவர்கள் என்பதால் இவர்களுக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற சந்தேகத்தின்பேரில் அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
ஆனால் அந்த பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் தங்காமல் நகர்புறம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களுக்கு அடிக்கடி சென்று வந்தனர். எனவே அரசு ஊரடங்கு உத்தரவை மக்கள் கடைபிடிக்காததால் திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் சொர்ணஅமுதம் மற்றும் திருத்தணி போலீஸ் டிஎஸ்பி சேகர், ஒன்றிய ஆணையர்கள் இணைந்து மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனைப்படி அந்த கிராமங்களை சுற்றி காவலர்களை நியமித்து செக்போஸ்ட் அமைத்து சீல் வைத்தனர். அவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் அதிகாரிகள் செய்தனர்.
மேலும் செய்திகள்
உடுமலை பஸ் நிலையத்தில் சுற்றுலா தலங்கள் குறித்து அறிவிப்பு பலகை வைக்க வலியுறுத்தல்
பழநி-ஈரோடு அகல ரயில்பாதை 100 ஆண்டு கனவுதிட்டம் நிறைவேறுமா?: மக்கள் எதிர்பார்ப்பு
பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு; இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டது: பழ.நெடுமாறன் பேட்டி
ஆயக்குடி கொய்யாவிற்கு புவிசார் குறியீடு: விவசாயிகள் கோரிக்கை
பழநி கோயிலை வட்டமடிக்கும் ஹெலிக்கேமராக்கள்: பாதுகாப்பை பலப்படுத்த கோரிக்கை
காரமடையில் அதிகாலையில் துணிகரம் பூ வியாபாரியின் மொபட்டை திருடிய சிறுவன்: சிசிடிவி காட்சி மூலம் போலீசார் தேடுதல் வேட்டை
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்
30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!
அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!
ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!
உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!