கொரோனா வைரசின் உற்பத்தி மையமாக மாறிய அமெரிக்கா: வைரஸ் தாக்கத்தால் பலி எண்ணிக்கை 2,211 ஆக உயர்வு: 1,23,426 பேருக்கு பாதிப்பு
2020-03-29@ 09:33:36

வாஷிங்டன்: உலக அளவில் கொரோனா வைரஸால் அமெரிக்கா அதிக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் வுகான் நகரில் தொடங்கிய கொரோனா வைரசின், புதிய உற்பத்தி மையமாக அமெரிக்கா மாறியிருக்கிறது. அங்கு நாளுக்கு நாள் வைரஸ் பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு தீவிரமடைந்துள்ள நிலையில், வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கையில் சீனா, இத்தாலியை மிஞ்சி அமெரிக்கா முதலிடத்துக்கு சென்றது. இந்நிலையில், நேற்று முன்தினம் ஒரே நாளில் அங்கு புதிதாக 18,000க்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று பரவ, மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி இருக்கிறது. மேலும், ஒரே நாளில் 401 பேர் பலியாகி உள்ளனர்.
தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 23,426 ஆக உள்ளது. மொத்த பலி 2,211 ஆக உள்ளது. நியூயார்க்கில் மட்டும் 50,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, 450-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அதிபர் டிரம்ப் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்துள்ளார். போர்காலங்களில் பயன்படுத்தும் சட்டமான பாதுகாப்பு உற்பத்தி சட்டத்தை பயன்படுத்தி, கொரோனா சிகிச்சைக்கு அவசிய தேவையான வென்டிலேட்டர்களை விரைந்து தயாரிக்க நாட்டின் மிகப்பெரிய மோட்டார் நிறுவனமான ஜெனரல் மோட்டார்சுக்கு அவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இத்தாலி நிலவரம்:
முன்னதாக இத்தாலியில் கோரத்தாண்டவம் ஆடி கொரோனா வைரஸ் சற்று ஓய்வெடுத்தது. இந்நிலையில், இத்தாலில் மீண்டும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளது. நேற்று முன்தினம் மிக அதிபட்சமாக 919 பேர் பலியாகி உள்ளனர்.
ஒரே நாளில் இவ்வளவு பேர் பலியாவது இதுவே முதல் முறையாகும். தற்போது, மொத்த பலி எண்ணிக்கை 10,023 ஆக உள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 92,472 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலி, சீனா, ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான், பிரிட்டனிலும் அதிக பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் செய்திகள்
பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
அவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்
அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு
பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு
பாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.!!!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்