The Eyes of Darkness, End of Days...40 வருடத்திற்கு முன்பே 2020ல் கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்படும் என்ற வியப்பூட்டும் தகவல்களை புத்தகத்தில் குறிப்பிட்ட எழுத்தாளர்கள்!!!
2020-03-28@ 11:53:07

சென்னை: கொரோனா வைரஸின் பயம் உலகெங்கிலும் உள்ள மக்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது. உலகெங்கிலும் சுமார் 28,000-க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்ற கொரோனா வைரஸுக்கு இதுவரை சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு 1981-ல் எழுதிய புத்தகத்தில், 2020ம் ஆண்டு கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து எழுத்தாளர் குறிப்பிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டீன் கூன்ட்ஸ் எழுதிய தி ஐஸ் ஆஃப் டார்க்னஸ் (The Eyes of Darkness, written by Dean Koontz). என்ற புத்தகம் தான் கொரோனா தாக்குதல் குறித்து விவரிக்கிறது.
கதை சுருக்கம் :
கிறிஸ்டினா இவான்ஸ் என்ற பெண்ணின் மகன் டேனி, ஒரு முகாமுக்கு செல்கிறார்.. அங்கு போன ஒரே மாசத்தில் மகன் இறந்துவிடுகிறார்.. இந்த தகவல் கிரிஸ்டினாவுக்கு சொல்லப்படுகிறது... இதை அம்மாவால் தாங்கவே முடியவில்லை... மகனின் இழப்பையும் ஜீரணிக்க முடியவில்லை.. அதனால், ஒரு வருடத்திற்கு பிறகு மகனுக்கு அந்த முகாமில் என்னதான் ஆனது என்று கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். மகன் டேனி அப்படி முயற்சி செய்யும்போதுதான், தன் மகன் டேனி சாகவில்லை.. உயிருடன் ஒரு மிலிட்டரி கேம்பில் ரகசியமாக அடைத்து வைக்கப்பட்டிருக்கிறான் என்பதை தெரிந்து கொள்கிறார்..
சீனாவின் வுகானில் ஆய்வகத்தில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட வைரஸ் போன்ற ஒரு ஆயுதத்தால் டேனி பாதிக்கப்பட்டிருக்கிறார் என்றும் கிறிஸ்டினாவுக்கு தெரியவருகிறது. இந்த வைரஸ் பற்றி சீன விஞ்ஞானி லீ சென் என்பவர், அமெரிக்க ராணுவத்திடம் சொல்கிறார்.. அந்த வைரசுக்கு 'வுகான் 400' என்று பெயரிடுகிறார்.. இப்படி அந்த பல திருப்பங்களுடன் அந்த கதை செல்கிறது. இப்போது இதில் உள்ள அதிசயம் என்னவென்றால், வுகான் 400 வைரஸ்தான் கொரோனா என்கிறார்கள்.. அந்த கதையில் வுகான் நகரில் தான் இந்த வைரஸ் துவங்குவதுபோலவே, இப்போதும் இந்த கொரோனா சீனாவின் அதே வுகான் நகரில்தான் துவங்கி உள்ளது.. மற்றொரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த கொரோன வைரஸ் பற்றி நமக்கு முதல் எச்சரிக்கை விடுத்த டாக்டர் பெயரும் லீ..தான்!
End of Days என்ற புத்தகம்
அதேபோல, இன்னொரு செய்தியும் வைரலாகி வருகிறது... பிரபல அமெரிக்க எழுத்தாளர் சில்வியா பிரவுன் 2008-ல் End of Days என்ற புத்தகம் எழுதியுள்ளார்.. இதில் அவர் ஒரு நோயை பற்றி சொல்கிறார்.. அதாவது '2020-ம் வருடத்தில் நிமோனியா போன்ற ஒரு நோய் வரும்.. அது உலகம் முழுதும் பரவும்.. நுரையீரல்களையும் சுவாச குழாய்களையும் நாசம் செய்து அது பலருக்கு எமனாக முடியும்... எந்த மருந்தாலும் அதை கட்டுப்படுத்தவோ, ஒழிக்கவோ முடியாது.. எந்த வேகத்தில் இந்த நோய் பரவுமோ, அதே வேகத்தில் அது மறைந்தும் விடும்' என்கிறார்.. இந்த கதையை நாம் எப்படி பார்ப்பது? கதைதானே? கற்பனைதானே என்றும் ஒதுக்க முடியாது? தற்செயல், யதார்த்தம் என்றும் சொல்லிவிட முடியாது!! ஒரு அறிவியல் பூர்வமான விஷயத்தை முன்கூட்டியே இவ்வளவு துல்லியமாக கணித்து சொல்ல முடியுமா என தெரியவில்லை. ஆனால் எப்படி பார்த்தாலும் வியப்புகளை வாரி வழங்கியுள்ள இந்த எழுத்தாளர்களை 'தீர்க்கதரிசிகள்' என்றுதான் சொல்ல தோன்றுகிறது!!
மேலும் செய்திகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் பாதுகாவலருக்கு ஒவ்வாமை : 52 பேருக்கு பக்கவிளைவால் தீவிர கண்காணிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்