ஊரடங்கு தடையுத்தரவை மீறி வீட்டைவிட்டு வெளியே வந்தால் கைது: கலெக்டர்களுக்கு கர்நாடக முதல்வர் உத்தரவு
2020-03-27@ 01:51:47

பெங்களூரு: கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களின் எல்லைகளை மூடவும், அரசின் உத்தரவை மீறி வெளியே வருவோரை கைது செய்யவும் மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். பெங்களூருவில் இருந்து நேற்று முதல்வர் எடியூரப்பா மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களின் எல்லைகளை மூடவேண்டும். மூடிய பின் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்ற மாவட்டத்திற்கோ அல்லது, வீடுகளைவிட்டு காரணமின்றி வெளியில் வருவோரை கைது செய்ய வேண்டும். மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார் வந்துள்ளது. அதிக விலைக்கு விற்போர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
தனியார் கிளினிக், மருத்துவமனைகளை மூடுவோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவும், டாக்டர்கள் எக்காரணம் கொண்டும் தேவையின்றி விடுமுறையில் செல்ல அனுமதிக்கக் கூடாது. வீட்டில் உள்ளவர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உரிய முறையில் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், சுமார் 50 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை தயார் நிலையில் வைக்கவேண்டும். வீட்டில் இருப்பதை விட்டு வெளியில் வருவோரை தடுக்க போலீசார் கடுமையான முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அதையும் மீறி அரசின் உத்தரவுக்கு எதிராக வெளியில் வருவோரை கைது செய்து சிறையில் அடைக்கவேண்டும். இவ்வாறு முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டார்.
மேலும் செய்திகள்
தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடக்கம்!!
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா...! பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என தகவல்
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் :விவசாயிகள் திட்டவட்டம்
டிராக்டர் பேரணியில் விவசாயிகள் தாக்கியதில் 83 போலீசார் காயம் : வீடியோ வெளியிட்டது டெல்லி காவல்துறை
இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் விகிதம் 1.44% ஆக நீடிக்கும் நிலையில், குணமடைந்தோர் விகிதம் 96.91% ஆக எகிறியது!!
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலி..! நள்ளிரவு முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு: போலீசார் உத்தரவு
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்