SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு உதவும் வகையில் அரசிடம் ஒருமாத சம்பளம் வழங்க கவர்னர் முடிவு

2020-03-27@ 01:40:48

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தனது ஒரு மாத சம்பளத்தை தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்க தமிழக கவர்னர்  முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். கொடிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.  இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு  அறிவிக்கப்பட்டு மக்கள் கடைபிடித்து வருகின்றனர். மத்திய அரசுடன் இணைந்து தமிழகம் அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை  மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனாவை ஒழிக்க நிதி ஒதுக்கி செயல்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், தமிழக கவர்னர் மாளிகை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், தமிழக அரசு கொரோனா வைரசிடம் இருந்து மக்களை  காப்பாற்ற, மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் மக்களுக்கு உதவும் வகையில் தனது ஒரு மாத சம்பளத்தை தமிழக  கவர்னர் பன்வாரிலால் புரோகித், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு கொடுக்க முடிவு செய்துள்ளார். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

  • dmk28

    புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தி.மு.க தலைமையில் தோழமைக் கட்சிகள் தமிழகம் முழுவதும் போராட்டம்: காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு..!!

  • india-jappan28

    வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய - ஜப்பானிய கடற்படையினர் கூட்டாகப் போர் பயிற்சி!: புகைப்படங்கள்

  • soldier28

    தென் கொரியா உடனான போரில் உயிர் தியாகம் செய்த 117 சீன வீரர்களின் அஸ்தி சீனாவிடம் ஒப்படைப்பு!: புகைப்படங்கள்

  • balaji28

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு!: பால், தயிர், தேன் கொண்டு சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்