டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிப்பு: டெல்லி அரசு
2020-03-26@ 12:00:18

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்ட மருத்துவரை சந்தித்த 800 பேர் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்படுவதாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. தலைநகர் டெல்லியில் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில் சமுதாய மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. வடகிழக்கு டெல்லியில் உள்ள சமுதாய மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதார அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். மருத்துவரின் மனைவி மற்றும் மகளுக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மார்ச் 12 -முதல் 18 வரை மஜ்பூரில் உள்ள கிளினிக்கிற்குச் சென்ற பார்வையாளர்கள் சுமார் 800 பேர் தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். மேலும், தனிமைப்படுத்தலுக்கான காலத்தின் போது கொரோனா வைரஸ் அறிகுறிகள் ஏற்பட்டால் மருத்துவரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார். மருத்துவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததில் தொற்று ஏற்பட்டதா அல்லது பயணம் செய்த ஒருவருடன் தொடர்பு கொண்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
மேலும் செய்திகள்
கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கருக்கு 2 வழக்குகளில் ஜாமீன்
திருச்சூர் அருகே படுஜோராக விற்பனையாகும் மூங்கில் சர்பத்: நாமும் குடிக்க செல்வோமா?
கங்கனாவை பார்க்க நேரமிருக்கு... விவசாயிகளை சந்திக்க நேரமில்லையா?... மகாராஷ்டிரா ஆளுநர் மீது சரத்பவார் காட்டம்
அதிக தொண்டர்கள் உள்ளனர்: சசிகலாவுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி மத்திய உள்துறையிடம் கோரிக்கை.!!!
பாலக்காடு அருகே ருசிகரம்; ஒரே பிரசவத்தில் ‘4 குட்டீஸ்’ மகிழ்ச்சியில் இளம்ஜோடி
94.1% பலன்: கோவிஷீல்டு, கோவாக்சினை தொடர்ந்து இந்தியா வருகிறது மாடர்னா தடுப்பூசி.!!!
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
அற்புதங்களை கண்டு ரசிக்க 2 கண்கள் போதாது!: விஞ்ஞானிகளால் கூட நம்ப முடியாத சன் டூங் குகையின் ஆச்சரிய படங்கள்..!!