சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்ல வேண்டும்: துணை தூதரகத்தை மலேசிய பயணிகள் முற்றுகை
2020-03-21@ 01:39:17

சென்னை: சிறப்பு விமானம் மூலம் மலேசியாவுக்கு அழைத்து செல்ல கோரி தேனாம்பேட்டையில் உள்ள மலேசியா துணை தூதரகத்தை நூற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கொரோனா பாதிப்பு காரணமாக மலேசியா தனது எல்லைகளை மூடி உள்ளது. மேலும், வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு வரும் விமானங்கள் வருவதற்கு அந்த நாடு தடை வித்துள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து மலேசியாவுக்கு செல்லும் விமானங்கள் அனைத்தும் 3 நாட்களாக நிறுத்தப்பட்டுள்ளன.
பல்வேறு காரணங்களுக்காக சென்னை வந்த 500க்கும் மேற்பட்ட மலேசியாவை சேர்ந்தவர்கள், நாடு திரும்ப முடியாமல் ஓட்டல்களிலேயே முடங்கி உள்ளனர். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மலேசியா துணை தூதரகத்தை ேநற்று நூற்றுக்கும் மேற்பட்ட மலேசிய பயணிகள் முற்றுகையிட்டு, சிறப்பு விமானம் மூலம் அழைத்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தூதரக அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
மேலும் செய்திகள்
குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் 3 பேர் பலி உயிர் பிழைத்த பிளம்பர் தூக்கிட்டு தற்கொலை
எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் சிறார் மன்ற கட்டிடம்: கமிஷனர் திறந்து வைத்தார்
ஒப்பந்த காலம் முடிந்து 2 ஆண்டாகியும் ஆமை வேகத்தில் திருவொற்றியூர் மேம்பால பணி: வாகன ஓட்டிகள் கடும் அவதி
வியாசர்பாடி குற்றப்பிரிவில் பிரின்டர் பழுது எனக்கூறி சிஎஸ்ஆர் வழங்காமல் அலைகழிக்கும் போலீசார்: பொதுமக்கள் குற்றச்சாட்டு
ஜோஸ் ஆலுக்காஸின் ‘‘ஷைன் ஆன் கேர்ள்’’
அகத்தீஸ்வரர் கோயில் நிலத்தை வைத்து வங்கியில் ரூ.69 கோடி கடன் பெற்றது எப்படி? அதிகாரிகள் விசாரணை நடத்த ஆணையர் உத்தரவு
25-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
24-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
22-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
ஆர்ஜெண்டினாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்!: வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின..மக்கள் அலறடித்து ஓட்டம்..!!
அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன், சாதனை படைத்த துணை அதிபர் கமலா ஹாரிஸ் பதவியேற்பு!: புகைப்படங்கள்