இத்தாலியை இருட்டாக்கும் கெரோனா: உலக அளவில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 8,944-ஆக அதிகரிப்பு...தீவிர பரிசோதனையில் மருத்துவர்கள்
2020-03-19@ 07:50:12

டெல்லி: சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் பரவல், நான்கு கட்டங்களாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற நிலையில், இந்தியா தற்போது 2வது கட்டத்தில் உள்ளது. இந்தியாவில் வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 153 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ள தீவிர நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் மூலம், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் வரை நாடு முழுவதும் 137 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று புதிதாக 16 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், வைரஸ் அறிகுறியுடன் உள்ள 5,700 பேர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
இதற்கிடையே, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை, உலகளவில் 8,944ஆக அதிகரித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,18,766 ஆக உயர்ந்துள்ளது. அதில், 84,386 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இத்தாலியில் 475 பேர் பலி:
இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 475 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து அந்நாட்டில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,978 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் 35,713 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 4,025 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். சீனாவில் 3,237 பேர், ஈரானில் 1,135 பேர், ஸ்பெயினில் 638 பேர், அமெரிக்காவில் 151 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
அமெரிக்க கேபிடல் கலவர விவகாரத்தில் டிரம்பை முடக்கி வைத்த இந்திய வம்சாவளி பெண்: சர்வதேச பத்திரிகைகள் பாராட்டு
ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் ... புது குண்டை தூக்கிப்போடும் சீனா : சாப்பிட்டவர்களை தேடும் அதிகாரிகள்
ஒவ்வொரு அமெரிக்கருக்கும் சுமார் ரூ.1 லட்சம் நிதியுதவி :அமெரிக்காவின் புதிய அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!
இந்தியாவின் மெகா தடுப்பூசித் திட்டம்: வாழ்த்திய இலங்கை பிரதமர் ராஜபக்ச; நன்றி கூறிய பிரதமர் மோடி
அமெரிக்காவில் மட்டும் 4 லட்சம் பேர் பலி.. உலகளவில் கொரோனா பலி எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது... திணறும் உலக நாடுகள்
இலங்கையில் நடந்த போர் குற்றம் பற்றி விசாரிக்க சுதந்திரமான தனி அமைப்பு: ஐநா.வுக்கு தமிழ் கட்சிகள் கடிதம்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்