உலகளவில் கொரோனா தாக்குதலால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,000-ஐ தொட்டது: இந்தியாவில் 143 பேருக்கு பாதிப்பு
2020-03-18@ 07:39:23

டெல்லி: கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உலகளவில் எட்டாயிரத்தை தொட்டுள்ளது. உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16% அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,503 பேர் இறந்திருக்கின்றனர். இதேபோல ஈரானில் 988 பேரும், ஸ்பெயினில் 533 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பிய நாடுகளுக்கு வெளிநாட்டினர் 30 நாட்கள் வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மசூதிகளில் 4 வாரங்களுக்கு தொழுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலும் இந்த வைரசுக்கு 143 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்தியா முழுவதும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் 3 பேர் இந்நோயால் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 40, கேரளாவில் 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 3 பேருக்கும், ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு, ஒடிசா, பஞ்சாப் மற்றும் உத்தரகாண்டில் தலா ஒருவருக்கும் நோய் தொற்று உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் பாதுகாவலருக்கு ஒவ்வாமை : 52 பேருக்கு பக்கவிளைவால் தீவிர கண்காணிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்