அரசு பணியில் எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு முந்தைய உத்தரவை மறுபரிசீலனை செய்யக்கோரி புதிய சீராய்வு மனு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
2020-03-18@ 03:43:39

புதுடெல்லி: அரசு பணி, பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முந்தைய நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் புதிய சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசு பணி, பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சாதி ரீதியான இடஒதுக்கீட்டை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை எனக் கூறியதோடு, வழக்கை உயர் அமர்வுக்கு மாற்ற மறுத்து கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி முந்தைய தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தற்போதைய தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தின் பொதுப்பணித் துறையில் உள்ள உதவி பொறியாளர், அரசு பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு என இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஷ்வரராவ் மற்றும் ஹேமந்த் குப்தா ஆகியோர் அமர்வு, கடந்த பிப்ரவரி 8ம் தேதி ஓர் உத்தரவை பிறப்பித்தது.
அதில், ‘‘அரசு பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. இதில் எந்த அடிப்படை உரிமையும் கிடையாது. மேலும் இடஒதுக்கீடு வழங்கலாமா, வேண்டாமா என்பது அரசின் முழுமையான விருப்பத்திற்கு உட்பட்டதாகும்’’ என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் அம்பேத்கர் பொறியாளர் சங்கம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ‘‘அரசு பணியில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் நீதிமன்றம் முந்தைய உத்தரவை மறு ஆய்வு செய்ய வேண்டும். அதேபோல் பணியாளர்களின் வாழ்வாதாரத்தையும் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் மேற்கண்ட தீர்ப்புக்கு எதிராக தான் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
கவர்னர் தமிழிசை நேரடி கவனிப்பு: 31 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி அமல்...ஜனாதிபதி ராம்நாத் ஒப்புதல்!!!!
அருணாச்சல பிரதேசம், சிக்கிம் எல்லையில் சீனா ஊடுருவ முயற்சி?.. கட்டுமானப் பணிகள் மேற்கொள்வதாக தகவல்
ரயில்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில் கட்டணம் திடீர் உயர்வு: இந்திய ரயில்வே அறிவிப்பு
மீனவர்களுக்கு தேவை தனி அமைச்சகமே தவிர, மற்றோரு அமைச்சகத்தின் கீழ் வரும் ஒரு துறை அல்ல... பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி பதில்
நாட்டில் உள்ள அனைத்தையும் விற்கும் மோடி அரசு: இந்த மத்திய அரசால் மக்களை கொடூரமாக சுரண்ட மட்டுமே முடியும்: மம்தா பானர்ஜி கடும் விமர்சனம்
தங்கம் போல் உயரும் பெட்ரோல், டீசல் விலை: மத்திய அரசை கண்டித்து எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனத்தில் பயணித்த மே.வங்க முதல்வர் மம்தா.!!!!
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!
25-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்