குடியாத்தம் அருகே விவசாய நிலத்தில் நுழைய முயன்ற 14 யானைகள் காட்டுக்குள் விரட்டியடிப்பு: வனத்துறையினர் நடவடிக்கை
2020-03-17@ 12:36:16

குடியாத்தம்: குடியாத்தம் வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 யானைகள் முகாமிட்டிருந்தது. இந்த யானைகள் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை உள்ளிட்ட பயிர்கள் மற்றும் மா, தென்னை மரங்களை சேதப்படுத்தியது. தகவலறிந்த வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்த யானைகளை விரட்டுவதற்காக கிருஷ்ணகிரியில் இருந்து யானைகளை விரட்டும் குழுவினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வனத்துறையினருடன் இணைந்து யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் ஆந்திர மாநில வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மீண்டும் அந்த 14 யானைகள் குடியாத்தம் வனப்பகுதிக்குள் நுழைந்தது. பின்னர் அருகே உள்ள குடிம்பிபட்டி கிராமத்திற்கு வந்த யானைக்கூட்டம் அங்குள்ள விவசாய நிலத்தில் நுழைய முயன்றது.
அப்போது, அங்கு ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர், பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். நீண்ட நேரத்திற்கு பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றது. இருப்பினும் இந்த யானைகளை ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த யானைகள் ஆந்திர வனப்பகுதியிலிருந்து குடியாத்தம் வனப்பகுதிக்கு அடிக்கடி வருவதால் அப்பகுதிமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர். இதனால், இந்த யானைகளை நிரந்தரமாக ஆந்திர வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும். மீண்டும் வராமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் தணிக்கை செய்யப்பட்ட வீடியோவை வெளியிட உத்தரவிடக் கோரி வழக்கு: பேஸ்புக், யூடியூப், கூகுள் நிறுவனம் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
சசிகலா அரசியலுக்கு வரவேண்டும்.. ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு எனது ஆதரவு உண்டு : பிரேமலதா விஜயகாந்த் கருத்து
சீர்காழியில் தீரன் பட பாணி கொலை, கொள்ளை.. கொள்ளையர்களை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த மக்கள்.. என்கவுண்டரில் ஒருவன் சுட்டுக் கொலை
சீர்காழி நகை கொள்ளை சம்பவம்..! தப்ப முயன்ற 3 கொள்ளையர்களில் ஒருவரை என்கவுண்டர் செய்தது காவல்துறை
நகை வியாபாரி வீட்டில் 2 பேரை கொலை செய்து 16 கிலோ தங்க நகைகள் கொள்ளை: சீர்காழியில் பரபரப்பு
துரோகிகளுக்கு மன்னிப்பு இல்லை முதல்வர் நாராயணசாமி ஆவேசம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!