கேரளாவில் கல்லறையில் படுத்த பயணி
2020-03-17@ 00:08:50

திருவனந்தபுரம்: கேரளாவில் நேற்று முன்தினம் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21 ஆக உள்ளது. இதில் இத்தாலி, இங்கிலாந்தில் இருந்து சுற்றுலா வந்த தலா ஒரு பயணியும் அடங்குவர். இதனால் வெளிநாட்டு பயணிகளுக்கு ரிசாட்டுகள், ஓட்டல்களில் அறை கொடுக்க மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் கோட்டயம் வந்த இத்தாலியை சேர்ந்த சுற்றுலா பயணிக்கு யாரும் அறை கொடுக்கவில்லை. பல ஓட்டல்கள் மற்றும் ரிசாட்டுகளுக்கு ஏறி இறங்கியும் பலன் இல்லை. இது குறித்து அறிந்த கோட்டயம் போலீசார் உடனடியாக அவரை தேடும் பணியில் இறங்கினர். நேற்று முன்தினம் காலை அவர் கோட்டயத்தில் உள்ள ஒரு கல்லறை தோட்டத்தில் இருந்து செல்வதை சிலர் பார்த்தனர். அதன் பிறகுதான் அவர் இரவு கல்லறை தோட்டத்தில் படுத்தது தெரியவந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் அனைத்து தேர்வாணையத் தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு மட்டும் தடை கவர்னருக்கு இல்லையா?: கேரளாவில் சர்வதேச சுற்றுலா தலமான மூணாறு, பொன்முடி உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கேரள கவர்னர் ஆரிப் முகமதுகான் தனது குடும்பத்தினருடன் சுற்றுலாத்தலமான பொன்முடி சென்றுள்ளார். அவருடன் 30 கவர்னர் மாளிகை ஊழியர்கள் சென்றுள்ளனர்.
மேலும் செய்திகள்
மேற்குவங்கம், கேரளா, அசாமில் ஆளுங்கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும்: ஐஏஎன்எஸ், சி-வோட்டர் கருத்துக்கணிப்பில் பரபரப்பு தகவல்
சிறுநீரக கோளாறு காரணமாக நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் தனியார் மருத்துவமனையில் அனுமதி
மத்திய சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படி நாளை முதல் 27 கோடி மூத்த குடிமக்களுக்கு தடுப்பூசி: தனியார் மருத்துவமனையில் ரூ.250 கட்டணம் வசூலிக்க அனுமதி
தமிழ் கற்பதில் தோல்வி அடைந்தேன் : மன்கிபாத்தில் பிரதமர் மோடி வருத்தம்
பிரிட்டிஷ் அரசை துரத்திய நமக்கு மோடி அரசை துரத்துவது கடினமான வேலை அல்ல: ராகுல்காந்தி எம்.பி. ஆவேசம்..!!
அமசோனியா-1 உள்ளிட்ட 19 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி சி-51 ராக்கெட்..!
28-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
27-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!