SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Internet Connection இல்லாமலே மொபைல்கள் மூலம் பணம் அனுப்ப உதவும் Lava Pay

2020-03-16@ 14:34:34

வங்கிகளுக்கு சென்று பணபரிவர்தனைகள் செய்த காலம் போய், நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களின் மூலம் ஒரே நொடியில் பணத்தை வேண்டியவர்களுக்கு அனுப்புகிறோம் மற்றும் பெற்று கொள்கிறோம். டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு நாம் மாறி இருந்தாலும், அதை செய்து முடிக்க Internet Connection அவசியம். இதை மாற்ற வருகிறது. இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. National Payments Corporation of India கூறியுள்ள தகவல்களின் படி, நடப்பாண்டு பிப்ரவரியில் 132.32 கோடி ரூபாய் அளவிற்கு UPI பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.

இந்திய மொபைல் நிறுவனமான லாவா புதிய டிஜிட்டல் கட்டண application-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு Lava Pay என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் Lava Pay பேமண்ட் App-ப்பை பயன்படுத்த Internet connectivity தேவை இல்லை என்பதே. இது குறித்து கூறியுள்ள லாவா மொபைல் நிறுவனம், Lava Pay மிக உயர்ரக பாதுகாப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எளிமையான முறையில் செய்து முடிக்க வாடிக்கையாளர்களுக்கு உதவும் என கூறியுள்ளது. அனைத்து Lava feature போன்களிலும் Lava Pay செயலியானது Preloaded ஆக வரும் என்றும், ஏற்கனவே தங்கள் நிறுவனத்தின் feature போன்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் Lava service centre-களுக்கு சென்று தங்களது போன்களில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது Lava நிறுவனம்.

Lava Pay செயலி peer-to-peer பேமெண்ட்ஸ்களை எளிதாக்குகிறது. அதாவது third party-யின் தலையீடு இல்லாமல் இரு நபர்கள் ஒருவருக்கொருவர் நேரடியாக தொடர்பு கொள்கிறார்கள். Lava Pay செயலியை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை பயன்படுத்த முக்கியமாக பயனர் UPI ஐடியை வைத்திருக்க வேண்டும். வாடிக்கையாளர் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டுமென்றால், பணம் பெற்று கொள்பவரின் மொபைல் எண்ணை Lava Pay-ல் கொடுக்க வேண்டும். பின்னர் பெறுநரின் Acoount-டிற்கு மாற்ற வேண்டிய தொகையை கொடுத்துவிட்டு பரிவர்த்தனை Pass Code-ஐ பயன்படுத்தி கட்டணத்தை அனுப்பி கொள்ளலாம்.

பண பரிவர்த்தனை வெற்றிகரமாக முடிந்ததும், பணம் அனுப்பியவர் மற்றும் பெற்று கொள்பவர் என இருவருமே தத்தம் லாவா மொபைல்களில் Confirmation Message-களை பெற்று கொள்வர். இணைய இணைப்பு தேவையில்லாத டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளுக்கு லாவா பே நல்ல தீர்வாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் Lava Pay மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கில் உள்ள பண இருப்பையும் (Account Balance) சரி பார்த்து கொள்ளலாம். இன்டர்நெட் வசதிகளை பெற முடியாத சுமார் 500 மில்லியன் இந்தியர்களை கவர லாவா நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • 24-09-2020

  24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

 • mumbairain23

  விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

 • ele23

  தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

 • ast23

  ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

 • chinacrob23

  சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்