கடல் நீரை குடிநீராக்கும் திட்ட பணி நடக்கும் சூளேரிக்காட்டுக்குப்பம் கிராமத்தில் அடிப்படை வசதி செய்து தரப்படும்: குடிநீர் வாரிய செயல் இயக்குனர் பேச்சு
2020-02-29@ 03:58:08

சென்னை: நெம்மேலியில் நாளொன்றுக்கு 150 எம்எல்டி உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைக்கும் திட்டத்திற்கான சூளேரிக்காட்டுக்குப்பம் கிராம மக்களுடனான வாழ்வாதாரம் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று சூளேரிக்காட்டுக்குப்பம் நடைபெற்றது. சென்னை குடிநீர் வாரிய செயல் இயக்குனர் டாக்டர் த.பிரபுசங்கர் பங்கேற்று கிராமத்தின் அடிப்படை வசதிகள் குறித்து அளிக்கப்பட்ட பல்வேறு மனுக்களை பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் பல்வேறு அரசு துறை அலுவலர்கள், கடல்நீரை குடிநீராக்கும் திட்ட ஒப்பந்தகாரர்கள் உள்பட சூளேரிக்காட்டுக்குப்பம் சார்ந்த 250க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்துகொண்டு பல்வேறு கோரிக்கைகளை வைத்து விவாதித்தனர். பின்னர் கிராம மக்கள் மத்தியில் செயல் இயக்குநர் பிரபுசங்கர் பேசியதாவது: இப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கிடும் வகையில் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுத்து பணிகள் மேற்கொள்ளப்படும். சூளேரிக்காட்டுக்குப்பம் மீனவ கிராமத்திற்கு இந்த கடல்நீரையே குடிநீராக்கி சுத்தப்படுத்தி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் சேமித்து அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குழாய் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
வீட்டுமனை பட்டா அனைத்து வீடுகளுக்கும் வழங்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஆளவந்தான் டிரஸ்ட் நிலப்பட்டா வழங்க இந்து அறநிலையத்துறை ஆணையரை அணுகி வீட்டுமனை பட்டாக்கள் வழங்க விரைவில் ஏற்பாடுகள் செய்யப்படும். கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணி மற்றும் பராமரிப்பு பணிகளில் சூளேரிக்காட்டுக்குப்பம் சார்ந்த படித்த இளைஞர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு அளிக்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மீன் பிடிப்பு அல்லாத காலங்களில் மீனவர்களுக்கு மாதம் ₹5,000 நிதி உதவி வழங்க ஏற்பாடு செய்யப்படும். சூளேரிக்காட்டுக்குப்பம் பள்ளியின் தரம் உயர்த்தப்பட்டு உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் பள்ளியாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் செய்திகள்
இந்தியாவிலேயே அதிக நாட்கள் பதவியில் இருந்த பெண் முதல்வர் ஜெயலலிதா..! நினைவிட திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி பேச்சு
டெல்லி முதலாளிகளுக்கு விசுவாசம் காட்ட விவசாயிகளை புரோக்கர்கள் என்ற போலி விவசாயிதானே முதல்வர் பழனிசாமி : மு.க.ஸ்டாலின் தாக்கு!!
ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள் :அர்ஜுனமூர்த்தி கருத்து
ஏழேழு பிறவி எடுத்தாலும் ஜெயலலிதாவுக்கு தீர்க்க முடியாத நன்றிக் கடன் பட்டிருக்கிறோம்...! நினைவிட திறப்பு விழாவில் ஓபிஎஸ் பேட்டி
ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கும் கட்சி திமுக தான் : திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் மடல்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம் : முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!
26-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்