வடகிழக்கு டெல்லி கலவரம்: பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது காங்கிரஸ்!
2020-02-28@ 15:33:11

புதுடெல்லி: வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. டெல்லி வடகிழக்கு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து ஒரு சாரார் ஊர்வலம் நடத்தினார்கள். இதற்கு அந்த பகுதி முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் மிகப்பெரிய கலவரமாக வெடித்தது. வீடுகள், கடைகள் மற்றும் பொது சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான வீடுகள், வாகனங்கள் எரிக்கப்பட்டன. சரமாரியாக கல்வீச்சு சம்பவங்களும் நடந்தன.
சில இடங்களில் கலவரக்காரர்கள் துப்பாக்கியால் சுட்டனர். இதனால் வடகிழக்கு டெல்லியில் கலவரமும், பதட்டமும் மேலும் அதிகரித்தது. அடுத்த 2 நாட்களும் (திங்கட்கிழமை, செவ்வாய்க்கிழமை) கலவரம் நீடித்தது. கலவரத்தில் 210க்கும் மேற்பட்டவர்கள் காயம்டைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் அடைந்தவர்களில் 30 சதவீதம் பேர் குண்டு காயம் அடைந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. அவர்களில் சிலர் சிகிச்சை பலனின்றி நேற்றும், இன்று காலையிலும் உயிரிழந்தனர். இதனால் டெல்லி கலவர பலி உயர்ந்தபடி உள்ளது. தற்போதைய நிலவரப்படி கலவரத்துக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 42 ஆக உள்ளது.
இந்த நிலையில், வடகிழக்கு டெல்லியில் நடந்த கலவரம் குறித்து நேரில் கண்டு அறிக்கை தர 5 பேர் கொண்ட குழுவை காங்கிரஸ் கட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், டெல்லி காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில், ஹரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாரிக் அன்வர், மஹிலா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் ஆகியோர் இந்த குழுவில் இடமபெற்றுள்ளனர். இந்த குழுவினர் டெல்லியில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் கண்டு, அங்குள்ள நிலைமை குறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் விரிவான அறிக்கையை தாக்கல் செய்வார்கள், என அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலிக்கு மீண்டும் நெஞ்சு வலி: கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி
பாலியல் சீண்டல் வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்குஎதிராக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு
தேசியக் கொடி ஏற்றி, மரக்கன்றுகள் நடுதலுடன் அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடக்கம்!!
4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து விடுதலையானார் சசிகலா...! பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னை வருவார் என தகவல்
வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறும் வரை டெல்லியை விட்டு வெளியேற மாட்டோம் :விவசாயிகள் திட்டவட்டம்
டிராக்டர் பேரணியில் விவசாயிகள் தாக்கியதில் 83 போலீசார் காயம் : வீடியோ வெளியிட்டது டெல்லி காவல்துறை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!