SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்த காத்தவராயன், மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன்: மு.க.ஸ்டாலின் இரங்கல்

2020-02-28@ 13:14:15

சென்னை: கடந்த ஆண்டு மே மாதம் நடைபெற்ற இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆன, குடியாத்தம் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காத்தவராயன்(60) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். இவரது இறப்பு செய்தி திமுகவினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில, காத்தவராயன் இறப்புக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எளிமைக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவரும், குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினருமான திரு.எஸ்.காத்தவராயன் திடீரென்று மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டு சொல்லொணாத் துயரத்திற்குள்ளானேன். அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்றிய இளைஞரணி அமைப்பாளராக, மாவட்ட பிரதிநிதியாக பணியாற்றிய அவர், தற்போது மாவட்ட துணை செயலாளர். கடைக்கோடி தொண்டனிடமும் கனிவுடன் பழகும் மனித நேயமிக்க பண்பாளர். பேரணாம்பட்டு நகர தலைவராக பணியாற்றி, மக்கள் மனம் கோணாமல் பல்வேறு சமுதாயப் பணிகளையாற்றி கழகத்திற்கு அந்த பகுதியில் நற்பெயர் சம்பாதித்து கொடுத்தவர். குடியாத்தம் இடைத்தேர்தலில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவையும் பெற்று, கழக சட்டமன்ற உறுப்பினராக அமோக வெற்றி பெற்ற அவர், தொகுதி பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக தொகுத்து வாதாடி அவையில் இருந்தவர்களை எல்லாம் வியக்க வைத்தவர்.

அவரது வாதத்திறமையை நேரில் கண்ட நான், அவரை என்னருகில் அழைத்து பாராட்டியது இன்றும் என் கண் முன் வந்து நிழலாடுகிறது. திரு காத்தவராயனுக்கு, கழகப் பணியும், மக்கள் பணியும் இரு கண்கள் போன்றது என்பதை நானறிவேன். என்றைக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மீது நீங்காபற்று வைத்திருந்த அவர், திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்தின் அசைக்க முடியாத தூணாகா குடியாத்தம் பகுதியில் விளங்கியவர். என்னுடன் பணியாற்றி வரும் கழக சட்டமன்ற உறுப்பினர்களில் நேற்று கே.பி.பி.சாமியையும், இன்று காத்தவராயனையும் பறிகொடுத்திருப்பது எனக்கு பேரிழப்பு. இந்த துயரமிகுந்த தருணத்தில், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன், என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • asusiiiee_dravviii1

  ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!

 • korona-death19

  கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!

 • tn-school19

  தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!

 • jesee_chrrr1

  3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!

 • 19-01-2021

  19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்