SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘இந்தியன் 2’ படப்பிடிப்பில் 3 பேர் பலியான விவகாரம் இயக்குநர் ஷங்கரிடம் குற்றப்பிரிவு போலீசார் இரண்டரை மணி நேரம் விசாரணை

2020-02-28@ 00:08:51

* பிரமாண்ட செட் அமைக்க உத்தரவிட்டது யார் என சரமாரி கேள்விகளுக்கு பதில் அளித்தார்

சென்னை : இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் 3 பேர் பலியான விவகாரத்தில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீது இயக்குநர் ஷங்கர் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, பிரமாண்ட செட் அமைக்க உத்தரவிட்டது யார் என்பது உள்ளிட்ட சரிமாரி கேள்விகளுக்குக்கு அவர் பதில் அளித்தார். லைகா நிறுவனம் தயாரிப்பில், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படம் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் படப்பிடிப்பு பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈ.வி.பி. ஸ்டுடியோவில் கடந்த 19-ம் தேதி இரவு  நடந்து கொண்டிருந்தபோது, பாரம் தாங்காமல் மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த கிரேன் அறுந்து விழுந்தது. இதில் உதவி இயக்குநர் கிருஷ்ணா, ஆர்ட் உதவியாளர் சந்திரன், தயாரிப்பு உதவியாளர் மது ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படக் குழுவைச் சேர்ந்த 9 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். அப்போது, ஈ.வி.பி. பிலிம் நகரில் பிரமாண்டமாக செட் அமைக்க முறையாக சென்னை மாநகர காவல் துறை அல்லது மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெறாதது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவுப்படி நசரத்பேட்டை காவல்நிலையத்தில் இருந்து மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் நாகஜோதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது விசாரணையை தொடங்கினார். பின்னர் கடந்த 24ம் தேதி முறையாக அனுமதி இல்லாமல் இந்தியன் 2 படப்பிடிப்புக்கு செட் அமைத்த அதன் நிர்வாகிகள் மற்றும் தொழிற்சாலையில் பயன்படுத்தும் கிரேனை படப்பிடிப்புக்கு வாடகைக்கு விட்ட அதன் உரிமையாளர் மற்றும் கிரேன் ஆபரேட்டர் ராஜன் உள்ளிட்ட 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
அவர்கள் அளித்த வாக்குமூலத்தின் படி திரைப்படத்தின் இயக்குநர் ஷங்கருக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பினர். அதன்படி இயக்குநர் ஷங்கர் நேற்று காலை 11.15 மணிக்கு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜரானார்.

அப்போது போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து சிறிது நேரம் பேசியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகி விபத்து குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, இந்தியன்2 திரைப்படத்துக்கு பிரமாண்ட செட் அமைக்க யாரிடம் அனுமதி பெறப்பட்டது. செட் அமைக்க யார் உத்தரவிட்டது. தொழிற்சாலையில் பயன்படுத்தும் கிரேன் வாடகைக்கு அழைத்தது யார். விபத்தின் போது நீங்கள் எங்கு இருந்தீர்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலை போலீசார் பதிவு செய்தனர். இரண்டரை மணி நேரம் நடந்த இந்த விசாரணை மதியம் 1.45 மணிக்கு முடிந்தது. அதைதொடர்ந்து இயக்குநர் ஷங்கர் புறப்பட்டு சென்றார்.

கமல்ஹாசனுக்கு லைகா நிறுவனம் எதிர்ப்பு : பொறுப்புகளை நடிகர், இயக்குனர் ஏற்க வலியுறுத்தல்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கும் படம் இந்தியன் 2. கடந்த வாரம் இதன் படப்பிடிப்பு சென்னை அடுத்துள்ள பிவிபி பிலிம் சிட்டியில் நடந்தது. அப்போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் உதவி இயக்குனர்  உள்ளிட்ட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 9 பேர் படுகாயம் அடைந்து  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார்  வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு  மாற்றப்பட்டிருக்கிறது. விபத்து தொடர்பாக கமல்ஹாசன், பட தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், ‘இனி படப்பிடிப்புகளில் ஹீரோ முதல் கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் பாதுகாப்பை  நீங்கள் உறுதிசெய்ய  வேண்டும். படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டால் அதற்கான முழு  பொறுப்பையும் தயாரிப்பு நிறுவனம் ஏற்க வேண்டும்’’ என கூறியிருந்தார்.

கமலின் கடிதத்திற்கு லைகா நிறுவனம் பதில் கடிதம் அனுப்பியுள்ளது. அதில், ‘உங்களின் கடிதத்திற்கு முன்பாகவே விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டோம். இந்தியன் 2 படப்பிடிப்பின்போது பாதுகாப்பு நடவடிக்கைகளில் லைகா நிறுவனம் எந்த குறையும் வைக்கவில்லை.  படப்பிடிப்பு தளத்தில் இருந்த உங்களுக்கும் (கமல்ஹாசன்), இயக்குனர் ஷங்கருக்கும் தான் பொறுப்பு இருக்கிறது. உங்கள் கட்டுப்பாட்டில்தான் முழு படப்பிடிப்பும் இருந்தது என்பதை நாங்கள் நினைவூட்டுகிறோம்’’ என லைகா தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dell_aacccc

    கொரோனா அச்சம் காரணமாக டெல்லியில் ஒரு வாரம் லாக்டவுன் : பல்லாயிரக்கணக்கில் வெளியேறிய வெளிமாநில தொழிலாளர்கள்

  • 20-04-2021

    20-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • spain-school-beach

    ஸ்பெயினில் வகுப்பறையாக மாறிய கடற்கரை!: தனிமனித இடைவெளியுடன் ஆர்வமுடன் கல்வி கற்கும் மாணவர்கள்..!!

  • 19-04-2021

    19-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2021

    18-04-2021 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்