SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காசிமேட்டில் பரபரப்பு: ரவுடி சரமாரி வெட்டிக்கொலை: 3 பேர் கும்பலுக்கு வலை

2020-02-27@ 00:49:01

தண்டையார்பேட்டை: காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் திவாகரன் (28). ரவுடி. நேற்று இரவு திவாகரன் காசிமேடு மீன் வியாபாரம் செய்யும் இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென திவாகரனின் கை, கால்கள் மற்றும் கழுத்தில் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் காசிமேடு காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காசிமேடு காவல்துறையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள திவாகரனை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். இதை தொடர்ந்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • madurai

    கொரோனா பரவலை தடுக்க நேற்று மக்கள் ஊரடங்கு: வெறிச்சோடிய மதுரை மாநகரம்

  • kurosiya

    கொரோனா தாக்குதலுக்கு மத்தியில் குரோஷியாவை உலுக்கிய கொடூர நிலநடுக்கம்...!இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயம்!

  • medition2020

    சீனாவின் ஜாக் மா அறக்கட்டளை மூலம் நன்கொடையளித்த மில்லியன் கணக்கான மருத்துவ பொருட்கள், கிழக்கு ஆபிரிக்க நாடான எத்தியோப்பா விமான நிலையத்திற்கு வந்தடைந்தது!

  • in22222

    கொரோனா தாக்குதலை முன்னிட்டு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு: மக்கள் நமாட்டம் இல்லாததால் வெறிச்சோடிய நகரங்கள்...! புகைப்படங்கள்

  • india2020

    கொரோனா வைரஸ் எதிரொலி: இந்தியாவில் ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பொதுமக்கள் கைத்தட்டி நன்றி தெரிவித்தனர்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்