டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை : முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு
2020-02-26@ 17:54:28

டெல்லி: டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். காவலர் ரத்தன்லால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என பேரவையில் அறிவித்தார்.குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் யமுனா விஹார் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.குடியுரிமை திருத்த சட்ட ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே நடந்த மோதலில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. நிலைமையை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.
இந்த வன்முறையால் தலைமை காவலர் ரத்தன்லால் உள்பட 3 காவல்துறை அதிகாரிகள் பலியாகினர். மேலும் 11 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்து மருத்துவ சிகிச்சையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் டெல்லியில் 4 நாட்களாக நடைபெற்று வரும் வன்முறையில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மேலும் அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு பணியும் வழங்கப்பட உள்ளது. கோலாக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக ரத்தன்லால் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை வடகிழக்கு குடியுரிமை சட்டம் வன்முறை உச்சநீதிமன்றம் உயர்நீதிமன்றம்மேலும் செய்திகள்
உத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்
கன்னியாஸ்திரி அபயா கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற பாதிரியார் ஐகோர்ட்டில் அப்பீல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இளம் வீரர்களை செதுக்கிய ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!!
டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி!: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..!!
வாக்களிக்க யாராவது பணம் கொடுத்தால், பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி பேச்சு.!!!
பாஜகவால் என்னைத் தொட முடியாது: ஆனால் என்னை சுட முடியும்...டெல்லியில் ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி.!!!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்