எறும்பு நடை
2020-02-25@ 15:08:25

நன்றி குங்குமம் முத்தாரம்
சமீபத்தில் பெங்களூர் லால்பாக் தோட்டத்தில் ஒரு நூதனக் காட்சி. சிலர் கையில் பூதக்கண்ணாடியை வைத்துக்கொண்டு படு சீரியஸாக எதையோ தேடிக்கொண்டிருந்தார்கள். நெருங்கி விசாரித்தால் அவர்கள் தேடியது எறும்பை. பிறகு தான் தெரிந்தது அவர்கள் எறும்புகளை ஆராயும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது. பெங்களூரில் உள்ள ஒரு வெளிநாட்டு தூதரகத்தில் சீனியர் சயின்டிபிக் அட்வைஸராக உள்ளார் எம்.சுனில்குமார். இவருடைய உருவாக்கம் தான் இந்த எறும்பு அமைப்பு. தான் பார்த்ததையும் ஆய்வு செய்வதையும் மற்றவர்களுடன் பகிரும்போது, அவர்களுக்கும் ஆர்வம் எழ இந்த அமைப்பு உருவானது. சமீபத்தில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் பெங்களூர் லால்பாக் தோட்டத்தை வலம் வந்து அங்கு மரங்களில் காணப்பட்ட எறும்புகளை ஆர்வமாகப் பிடித்தனர்.
25 வருடங்களாக ஆய்வு செய்யும் சுனிலிடம் எறும்பு சார்ந்த தகவல்களுக்குப் பஞ்சமில்லை. இதோ அந்த தகவல்கள் சில எறும்புகளுக்குக் கண் தெரியாது. ஆனால், அவை அதுபற்றி கவலைப்படாமல் தன் வேலையைச் செய்யும். தவிர, அவை தன்னுடைய உணர்வு மற்றும் தொடுதலை வைத்தே அனைத்தையும் தெரிந்துகொள்ளும் எறும்புகளுக்கு இறக்கை உண்டு. ஆனால், ஆண்- பெண் எறும்புகளில் கருவுறுதல் தன்மையைக் கொண்டவைக்கு மட்டுமே இறக்கை இருக்கும். இறக்கை இல்லாமலும் ஆண்- பெண் எறும்புகளில் கருவுறுதல் நடக்கும். இவற்றின் மூலம் பிறக்கும் குழந்தைகளை வைத்து புது காலனிகள் அவற்றினிடையே உருவாகின்றன.
சிவப்பு எறும்பு கடிக்கும். ஆனால், அவை தன்னுடைய கொடுக்கால் கடிக்கும்போது, அதற்கும் காயம் ஏற்படும். இதனால் அந்த எறும்புகள், முதலில் நமது தோளில் ஒரு வெட்டை உருவாக்கி, அமிலத்தை பாய்ச்சும். அப்போது நமக்கு சுரீர் என வலிக்கும்.எறும்புகள் கட்டுப்பாடானவை. அவற்றிற்குக் கொடுத்த பாதையில் செல்லும். ஒவ்வொன்றும் ஒவ்வொரு பாதையில் செல்லும். இறந்தவர்களை மனிதர்கள் புதைப்பதுபோல், எறும்புகளும் இறந்ததைப் புதைக்கும்.கூடி அளவளாவும். அப்போது தகவல் பரிமாற்றங்களைச் செய்து கொள்ளும்.மழைக் காலத்திற்காக, தானியங்களை சேமிக்கும். சேமித்த தானியம் வேர் விட்டால் அதனை அகற்றி விடும்.
வயதான எறும்புகளுக்கு இளம் எறும்புகளிடம் மிகுந்த மதிப்பு உண்டு. வயது ஆக ஆக பற்கள் போய்விடும். வேகம் குறைந்து விடும். கூர்மையான பற்களைக்கொண்ட எறும்புகள், மிக சுறுசுறுப்பாக செயல்படும்.சுள்ளெறும்பு - அசைவ உண்ணி. மனிதர்களை நறுக்கென கடித்துவிடும்.கறுப்பான பெரிய கட்டெறும்பும் கடிக்கும்.உடலின் நடுவில் மட்ட சிவப்பு மற்ற இடங்களில் கறுப்பு வண்ணம் கொண்டவை சுளுக்கெறும்பு.
கடித்தால் வலி கடுமையாக இருக்கும்.உலகின் பல இடங்களில் தென்பட்டாலும் வெப்ப பகுதியே எறும்புக்கு உகந்தது.110-130 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தாவரம் பூமியில் வந்தது என்பர். அடுத்து அதனை கடித்துச் சாப்பிட எறும்பு வந்துவிட்டதாம். உலகில் 22,000 இன எறும்புகள் உள்ளன.இறக்கை இல்லாத எறும்புகள்தான் காலனியின் வேலைக்காரர்கள் மற்றும் வீரர்கள். இவை சுறுசுறுப்பாக இயங்கும்.கருவுறுதல் தன்மை கொண்ட ஆண்-பெண் எறும்புகள் பெரும்பாலும் சோம்பேறிகள்.பெண் எறும்புதான் காலனியின் தலைவி. மன்னர்கள்போல இது, மிக உள்ளேதான் வசிக்கும்.வேப்பமரங்களில் காணப்படும் பெரிய கறுப்பு எறும்பும் நறுக்கென கடித்துவிடும்.
Tags:
எறும்பு நடைமேலும் செய்திகள்
வாக்காளர் அடையாள அட்டை வெச்சிருக்கீங்களா?
அனாதையாகும் சொகுசு கார்கள்!
இது ஐரோப்பியப் பஞ்சாங்கம்!
கழுகு வளர்க்கறீங்களா?
பகார்டி: 150 வருடங்களாக உலகின் நம்பர் ஒன் மதுபான நிறுவனம்!
ரேகைகளை அழிக்கும் விநோத நோய்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்