இஷ்டம் போல் உயரும் தங்கம் விலை : சவரன் ரூ.33 ஆயிரத்தை தாண்டியதால் நடுத்தர வர்க்கத்தினருக்கு கனவாகிய தங்க நகைகள்:
2020-02-24@ 15:45:37

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு மேலும் ரூ.94 உயர்ந்து ரூ.4,166-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் உயர்ந்து ரூ.53.30-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இந்த விலை உயர்வால் நகைக்கடைகளில் 30 சதவீதம் அளவுக்கு விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறினர்.
தங்கம் விலை கடந்த ஜனவரி மாதம் முதல் உயர்ந்து வருகிறது. இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வந்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் பிப்ரவரி மாதம் முதல் தங்கம் விலை மேலும் உயர்ந்து வருகிறது. நாளுக்கு நாள் தங்கம் விலை உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு, அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.அதாவது, கடந்த 17ம் தேதி ஒரு சவரன் ரூ31,216க்கு விற்கப்பட்டது. தொடர்ந்து 18ம் தேதி ஒரு சவரன் ரூ31,408, 19ம் தேதி ரூ31,720, 20ம் தேதி ரூ31,824க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அதாவது கிராமுக்கு ரூ71 அதிகரித்து ஒரு கிராம் ரூ4,051க்கும், சவரனுக்கு ரூ584 அதிகரித்து சவரன் ரூ32,408க்கும் விற்கப்பட்டது.
இந்த விலை உயர்வு தங்கம் விலை வரலாற்றில் புதிய சாதனையை படைத்தது. முதல் முறையாக கிராம் ₹4 ஆயிரத்தை கடந்தது. இந்த அதிர்ச்சியை தாங்குவதற்குள் இன்றும் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நகை வாங்குவோருக்கு ஒருவித பயத்தை ஏற்படுத்தி வருகிறது. திருமணம் உள்ளிட்ட விசேஷத்திற்காக நகை வாங்க பணத்தை சிறுக, சிறுக சேர்த்து வைத்திருக்கும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, இந்த விலை ஏற்றம் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளதாக கூறி வருகின்றனர். தங்கம் விலை ஜெட் வேகத்தில் அதிகரித்த போதிலும் இன்னும் விலை உயரத்தான் வாய்ப்புள்ளதாக நகை வியாபாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் செய்திகள்
சற்றே அதிகரித்த தங்கம் விலை : சவரனுக்கு ரூ.72 உயர்ந்து, ரூ.36,976-க்கு விற்பனை!!
தமிழகத்தில் பெட்ரோல் விலை 88ஐ எட்டியது: நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரிப்பு: வாகன ஓட்டிகள் கடும் அவதி
இனி அதிகாலையில் விலை நிர்ணயம்; நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசு உயர்வு: என்இசிசி அறிவிப்பு
இனி தங்க வேட்டை: 37,000-க்கு கீழ் சென்றது தங்கத்தின் விலை: சவரனுக்கு ரூ.48 குறைந்து ரூ.36,816-க்கு விற்பனை
தங்கம் சவரன் 37,000க்கும் கீழ் குறைந்தது
27,000 முதல் 44,000 வரை மாருதி கார் விலை சலுகை பெற இன்றே கடைசி நாள்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்