மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனிலும் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு!
2020-02-24@ 15:20:07

துபாய்: குவைத் மற்றும் பஹ்ரைனில் முதன்முறையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன. சீனாவின் ஹூபெய் மாகாணம், வுகான் நகரில் உருவாகிய கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் 28 நாடுகளில் பரவியிருக்கிறது. சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 2,592 பேர் வரை பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் 79 ஆயிரம் பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த எண்ணிக்கை உயரக்கூடும் என்ற அச்சம் தொடருகிறது. வைரஸ் பரவுவதை தடுக்க சீன அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதேபோல், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகின்றன. சீனாவுக்கு விமான சேவையை பல நாடுகள் ரத்து செய்துள்ளன. இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் பஹ்ரைனில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது முதன்முறையாக கண்டறியப்பட்டு உள்ளது. இதனை அந்நாடுகளை சேர்ந்த சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஈரான் நாட்டில் இருந்து திரும்பி வந்தவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது. இவர்களில் குவைத் நாட்டில் 3 பேருக்கும், பஹ்ரைனில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பனிப்பாறைகள் உருகுவதை தடுக்க போர்வைகளை போர்த்தும் சீனா!!
உலக கொரோனா நிலவரம்: 20 லட்சத்தை தாண்டியது உயிரிழந்தோர் எண்ணிக்கை
அவசர கதியில் 6 மருத்துவமனை கட்டுகிறது மீண்டும் பரபரப்பாகிறது சீனா: தடுப்பூசிக்கும் அடங்காத கொரோனா வைரஸ்
அமெரிக்க அதிபராக பிடென் நாளை பதவியேற்பு: ராணுவ கட்டுப்பாட்டில் வாஷிங்டன்: 25,000 பாதுகாப்பு வீரர்கள் குவிப்பு
பலத்த பாதுகாப்புடன் அமெரிக்காவின் 46வது அதிபராக நாளை மறுநாள் ஜோ பிடன் பதவியேற்பு: வாஷிங்டனில் 25,000 தேசிய காவல்படை வீரர்கள் குவிப்பு
பாகிஸ்தான் அடிமைகளாக இருக்க விரும்பவில்லை: பிரதமர் மோடி படத்துடன் பேரணி நடத்திய சிந்து மாகாண மக்கள்.!!!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்