காந்தியின் சபர்மதி ஆசிரமத்தில் ராட்டையை சுழற்றி பார்த்த அதிபர் டிரம்ப: ஆசிரமத்தின் பெருமைகளை ட்ரம்ப்பிற்கு எடுத்துரைத்தார் பிரதமர் மோடி!!
2020-02-24@ 13:10:23

அகமதாபாத்: மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா வந்தடைந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா, மருமகன் ஜேர்டு குஷ்னர் மற்றும் அமெரிக்க உயரதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட பிரதிநிதிகள் ஆகியோரும் தனி விமானத்தில் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தனர். அகமதாபாத்தில் வந்து இறங்கிய அமெரிக்க அதிபர் டிரம்புக்கு குஜராத் பாரம்பரிய முறைப்படி சங்கொலி முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. மேளதாளங்கள் முழங்க ட்ரம்புக்கு குஜராத் பாரம்பரிய கலைஞர்கள் வரவேற்பு அளித்தனர்.அகமதாபாத் விமானநிலையம் வந்தடைந்த அதிபர் டிரம்பை கட்டித் தழுவி வரவேற்றார் பிரதமர் மோடி. இதைத் தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து பிரத்யேக காரில் சபர்மதி ஆசிரமம் புறப்பட்டார். சபர்மதி ஆசிரமம் செல்லும் வழியில் அதிபர் டிரம்பிற்கு இந்திய கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குஜராத் சபர்மதி ஆசிரமம் அமெரிக்க அதிபர் டிரம்ப் சென்றடைந்தார்.
சபர்மதி ஆசிரமத்தில் அதிபர் ட்ரம்பின் பயணம் குறிப்புகளாக பின்வருமாறு...
*சபர்மதி ஆசிரமத்தில் அதிபர் டிரம்பிற்கு காந்திய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சபர்மதி ஆசிரம நிர்வாகிகள் மோடி மற்றும் அதிபர் டிரம்புக்கு கதர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
*இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்தை அதிபர் டிரம்ப் பார்வையிட்டார்.
*அதன் பின்னர், சபர்மதி ஆசிரமத்தில் உள்ள மகாத்மா காந்தியின் படத்திற்கு அதிபர் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினர். காந்தி படத்துக்கு கதர் நூலால் ஆன மாலையை அறிவித்து மோடி, டிரம்ப் மரியாதை செலுத்தினர்.
*காந்தி வசித்த சபர்மதி ஆசிரமத்தை அதிபர் டிரம்புக்கு மோடி சுத்திக் காட்டினார். காந்தி பயன்படுத்திய பொருள்கள் குறித்தும் அதிபர் டிரம்புக்கு மோடி விளக்கிக் கூறினார்.
*இதைத் தொடர்ந்து மகாத்மா காந்தி நூல் நூற்ற ராட்டையில் அதிபர் ட்ரம்ப் தரையில் அமர்ந்து நூல் நூற்று மகிழ்ந்தார்.
*சபர்மதி ஆசிரமத்தில் உள்ள வருகைப் பதிவேட்டில் அதிபர் ட்ரம்ப் தனது கருத்தைப் பதிவிட்டார். எனது சிறந்த நண்பர் பிரதமர் மோடிக்கு நன்றி, அற்புதமான பயணம் என்று சபர்மதி ஆசிரம வருகை பதிவேட்டில் அதிபர் டிரம்ப் பதிவு செய்தார். டிரம்புடன் அவரது மனைவி மெலனியாவும் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார்.
*பிறகு மகாத்மா காந்தியின் 3 குரங்கு பொம்மைகளை காட்டி அதிபர் டிரம்புக்கு பிரதமர் மோடி விளக்கம் அளித்தார்.
*இறுதியாக சபர்மதி ஆசிரமத்தில் இருந்து மொதேரா கிரிக்கெட் மைதானத்திற்குச் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புறப்பட்டார்.
*அகமதாபாத்தில் உள்ள மொதேரா மைதானத்தில் நடைபெறும் நமஸ்தே டிரம்ப் நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்க
உள்ளார்.
*கிரிக்கெட் மைதானத்தில் கூடியுள்ள ஒரு லட்சம் பேர் முன் டிரம்ப் உரையாற்ற உள்ளார்.
மேலும் செய்திகள்
உத்தரபிரதேசத்தில் மாடுகள் வதை புகாரில் சோதனை : மக்கள் கற்கள் வீசி தாக்கியதில் 5 போலீசார் காயம்.. துப்பாக்கி சூடு நடத்தியதால் பதற்றம்
கன்னியாஸ்திரி அபயா கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற பாதிரியார் ஐகோர்ட்டில் அப்பீல்
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க வெற்றி: இளம் வீரர்களை செதுக்கிய ராகுல் டிராவிட்டிற்கு ட்விட்டரில் வாழ்த்து மழை!!
டிராக்டர் பேரணிக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு எதிரொலி!: தலைநகர் எல்லையில் விவசாயிகளுடன் டெல்லி போலீசார் பேச்சுவார்த்தை..!!
வாக்களிக்க யாராவது பணம் கொடுத்தால், பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்: தேர்தல் பிரச்சாரத்தில் மம்தா பானர்ஜி பேச்சு.!!!
பாஜகவால் என்னைத் தொட முடியாது: ஆனால் என்னை சுட முடியும்...டெல்லியில் ராகுல்காந்தி பரபரப்பு பேட்டி.!!!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்