தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை: மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
2020-02-24@ 12:00:53

சென்னை: தமிழகத்தில் முன்கூட்டியே சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை, என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ராயபுரத்தில் உள்ள ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் ஒவ்வொரு ஆண்டும் தங்க மோதிரம் பரிசாக வழங்கி வருகிறார். இந்த வருடம் ஜெயலலிதா பிறந்தநாளான இன்று 7 குழந்தைகள் பிறந்துள்ளன. ஜெயலலிதா பிறந்தநாளில் பிறந்த 7 குழந்தைகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் தங்கமோதிரம் அணிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு கடன் வாங்கி கொள்ளை அடிக்கவில்லை. கடன் வாங்கி மூலதனமாக செயல்படுகிறது. 2021 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம். நிர்பயா நிதியை பயன்படுத்தி தான் அரசு பேருந்துகளில் பெண்களின் பாதுகாப்பிற்காக சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது, நிர்பயா நிதியை மாநில அரசு முழுமையாக பயன்படுத்தி வருகிறது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக வேளாண் மண்டல அறிவிப்பை எதிர்க்கட்சிகள் பாராட்ட மறுக்கிறார்கள். தமிழக சட்டமன்றத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறும் என்ற தகவல் உண்மை அல்ல. சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை, என்று கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்
4 ஆண்டுகள் ஆகியும் ஜெயலலிதாவின் மரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது... இந்த லட்சணத்தில் நினைவிடம் திறப்பது நியாயமா?: மு.க.ஸ்டாலின்
சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய அதிமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம்: ஓபிஎஸ் - இபிஎஸ் நடவடிக்கை
அதிமுகவை மீட்டெடுத்து, உண்மையான ஜெயலலிதா ஆட்சியை தமிழகத்தில் கொண்டு வருவோம் : டிடிவி தினகரன் பேட்டி
தமிழக அரசு யாருக்கு பயப்படுகிறது? கமல் கேள்வி
ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழா நன்றி கொன்ற இருவர் நடத்தும் நாடகம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
சொல்லிட்டாங்க...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!