அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை எதிர்த்து 2 குற்றவாளிகள் மேல்முறையீடு : மகளிர் காவல் ஆய்வாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு
2020-02-24@ 11:32:49

சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை எதிர்த்து மேலும் இரண்டு பேர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட லிப்ட் ஆபரேட்டர் தீனதயாளன், வீட்டு பணியாள் ஜெயராமன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு
சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு விசாரணையின் போது பாபு என்பவர் இறந்துவிட்டதால், மீதமுள்ள 16 பேர் மீதான வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது.இந்த வழக்கில் பிப்ரவரி 3ம் தேதி தீர்ப்பளித்த சிறப்பு நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 16 பேரில் குணசேகரன் என்பவரை விடுதலை செய்தது.மீதமுள்ள 15 பேரில் 5 பேருக்கு ஆயுள் தண்டனையும், ஒருவருக்கு 7 ஆண்டு சிறையும், 9 பேருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது.
குற்றவாளிகள் மேல்முறையீடு
இந்த தீர்ப்பை ரத்து செய்யக் கோரி கோரி 5 ஆண்டு சிறை சிறை தண்டனை விதிக்கப்பட்ட உமாபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதேபோல் லிப்ட் ஆபரேட்டர் தீனதயாளன், வீட்டு பணியாள் ஜெயராமன் ஆகியோரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தங்களுக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைத்து தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என இருவரும் தங்கள் மனுக்களில் கோரியுள்ளனர்.இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்க அயனாவரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டது.
Tags:
குற்றவாளிகள் மேல்முறையீடு அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு மகளிர் காவல் ஆய்வாளர் உயர் நீதிமன்றம்மேலும் செய்திகள்
மீண்டு வரும் தமிழகம்: மேலும் 589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: தமிழக சுகாதாரத்துறை..!
பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள அச்சப்படுவது ஏன்? காங். எம்.பி. கேள்வி
தமிழகத்தில் தாமரை மலர்ந்தது போன்று முக மலர்ச்சியோடு கொரோனா தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள வேண்டும் : ஆளுநர் தமிழிசை
9 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு: ஆயத்த பணிகள் தீவிரம்
முதல்வர் பழனிசாமி, தனது தோல்விகளை மறைத்து அரசுப் பணத்தில் பக்கம் பக்கமாக விளம்பரம் செய்துக் கொண்டிருக்கிறார் : மு.க.ஸ்டாலின் உரை
அமெரிக்க அதிபர் போல பிரதமர் மோடியும் முதலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கலாம் : கே.எஸ்.அழகிரி
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்