தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ரவி பூஜாரி இந்தியா அழைத்து வரப்படுகிறார்
2020-02-24@ 10:26:12

கர்நாடகா: இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியான ரவி பூஜாரி தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டார். இந்திய அதிகாரிகள் குழுவினர் அவரை இந்தியாவுக்கு அழைத்து வருகின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்தவர் ரவி பூஜாரி இவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம், சோட்டா ராஜனுடன் ஏற்கெனவே தொடர்பு வைத்திருந்தார். கர்நாடகா மட்டுமல்லாது பல்வேறு மாநிலங்களில் மிரட்டி பணம் பறித்தல், கொலை உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் இவர் மீது பதிவாகி உள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக அவர் தலைமறைவாக உள்ளதால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் தங்கியிருந்த பூஜாரி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார். அவரை இந்தியாவுக்கு அழைத்து வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டிருந்த நிலையில் உள்ளூர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது. இதையடுத்து அவர் அங்கிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில் தென்னாப்பிரிக்கா மற்றும் செனகல் போலீஸார் அவரை தேடி வந்தனர். அப்போது ஒரு கிராமத்தில் தங்கியிருந்த அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக ஐபிஎஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் குழு தென்னாப்பிரிக்கா விரைந்துள்ளது. பூஜாரியை அங்கிருந்து செனகல் அழைத்துச் சென்றுள்ளனர். அங்கிருந்து நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகளை முடித்த பின்னர் பூஜாரியை அழைத்துக் கொண்டு அதிகாரிகள் இந்தியா திரும்புகின்றனர். இன்று இந்தியா வந்தடைவார்கள் என கர்நாடக போலீஸ் தரப்பில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் பாதுகாவலருக்கு ஒவ்வாமை : 52 பேருக்கு பக்கவிளைவால் தீவிர கண்காணிப்பு
விவசாயிகள் போராட்டத்தில் தீவிரவாத அமைப்பு தொடர்பு : பஞ்சாபி நடிகர், விவசாய சங்கத் தலைவர் உள்ளிட்ட 40 பேருக்கு சம்மன் அனுப்பியது என்ஐஏ..!
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்