காமன், பிரக்கோலி, சோள சமோசா, காஜூ கத்லி.. சமையல் கலை நிபுணர் சுரேஷ் கண்ணாவின் கை மணத்தில் அதிபர் ட்ரம்புக்கான இந்திய உணவுகள் தயார்!!
2020-02-24@ 10:12:01

அகமதாபாத் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மற்றும் அவரது குடும்பத்தினருக்காக சிறப்பு இந்திய உணவு பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோருடன் 2 நாள் பயணமாக இன்று (திங்கட்கிழமை) இந்தியா வருகிறார். அகமதாபாத்தில் வந்திறங்கும் அவர் அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மாலையில் ஆக்ரா புறப்படுகிறார்.இந்நிலையில் அகமதாபாத்தில் உள்ள ஃபார்ச்சுன் லேண்ட்மார்க் ஓட்டலில் பணியாற்றும் புகழ்பெற்ற சுரேஷ் கண்ணா என்ற சமையல் கலை நிபுணர் தான் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கான உணவுகளை தயாரிக்க இருக்கிறார்.
குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற காமன் என்ற உணவை ட்ரம்ப் ருசிக்க இருப்பதாக சுரேஷ் கண்ணா தெரிவித்துள்ளார். காமன் என்பது ஆவியில் வேகவைத்து தயாரிக்கப்படும் உணவு வகையாகும். அத்துடன் பிரக்கோலி, சோள சமோசா, முந்திரி பருப்பில் கொண்டு செய்யப்படும் இனிப்பு வகையான காஜூ கத்லி போன்ற இனிப்பு வகைகளும் உணவு பட்டியலில் உள்ளன. ட்ரம்ப் குடும்பத்தினர் மற்றும் அதிகாரிகளுக்கு பல வகையான உயர் தர தேநீர் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. அகமதாபாத்தில் சில மணி நேரமே இருக்கும் ட்ரம்ப் குடும்பத்தினருக்கு பல வகையான அமெரிக்க உணவு வகைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.
இது தொடர்பாக சுரேஷ் கண்ணா மேலும் கூறுகையில், ‘இன்று எங்கள் ஓட்டலுக்கு மிகவும் முக்கியமான தினமாகும். டிரம்ப் மற்றும் அவருடன் வரும் விருந்தினர்களுக்கு வழங்குவதற்காக கிரீன் டீ, லெமன் டீ உள்ளிட்ட உயர்ந்த ஒரு தேநீர் பட்டியலை நாங்கள் தயாரித்து உள்ளோம். ‘காமன்’ என்பது குஜராத்தின் புகழ்பெற்ற உணவு. இதை நாங்கள் லேசான ஆவியில் வேகவைத்து டிரம்புக்கு வழங்குவோம்’ என்று கூறினார்.
மேலும் செய்திகள்
வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகளைத் தூண்டிவிட்டு போராட வைக்கின்றனர்: அமித்ஷா குற்றச்சாட்டு..!
கோயில்களை சேதப்படுத்திய பாதிரியார் அதிரடி கைது : பரபரப்பு வாக்குமூலம்
கடன் வாங்கிய வழக்கை மூடி மறைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் சிபிஐ இன்ஸ்பெக்டர், ஸ்டெனோகிராபர் சஸ்பெண்ட்: 2 டிஎஸ்பிக்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை
மான் வேட்டை வழக்கில் பிப். 6ல் ஆஜராக சல்மான் கானுக்கு உத்தரவு
ராஜஸ்தானில் மின் கம்பத்தில் பஸ் மோதி 6 பேர் தீயில் கருகி பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!
டெல்லியில் தடுப்பூசி போட்டுக் கொண்ட எய்ம்ஸ் பாதுகாவலருக்கு ஒவ்வாமை : 52 பேருக்கு பக்கவிளைவால் தீவிர கண்காணிப்பு
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்
மாட்டு வண்டியை ஒட்டிய மு.க.ஸ்டாலின்... மக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்ட முதல்வர் பழனிசாமி, ராகுல் காந்தி!!
16-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
14-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
9 மாதங்களுக்கு பிறகு தியேட்டரில் ‘மாஸ்டர்’ ரிலீஸ்!: விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்..புகைப்படங்கள்