SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரம்பின் இந்திய வருகை அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரமாக மாற கூடாது: காங்கிரஸ் வலியுறுத்தல்

2020-02-22@ 00:49:59

புதுடெல்லி: `டிரம்பின் இந்திய வருகை, அமெரிக்க அதிபருக்கான தேர்தல் பிரசாரமாக இருக்கக் கூடாது' என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா, டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: அமெரிக்க அதிபர் டிரம்பின் வருகை, நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகளுக்கு முடிவுகளை எடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும். இது தொடர்பாக பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபரும் கூட்டறிவிப்பு செய்ய வேண்டும. இந்தியாவுக்கு வழங்கி வந்த முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை வாபஸ் பெற இருப்பதாக அமெரிக்க அறிவித்திருப்பது கவலை அளிக்கிறது. அமெரிக்காவுக்கு பணியாற்ற செல்லும் இந்தியர்களுக்கு வழங்கப்படும் எச்1பி விசா எண்ணிக்கை குறைப்பும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்தும் டிரம்பின் இந்திய வருகையின்போது பேச வேண்டும்.

இதற்கு மாறாக, அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கான பிரசார களமாக அவருடைய வருகையை மாற்றி விடக்கூடாது.  நாட்டின் நலனுக்கு நன்மை தரக் கூடியதாக இந்த பயணம் இருக்க வேண்டும். மோடி அமெரிக்க சென்றபோது நடத்தப்பட்ட ஹவ்டி மோடி நிகழ்ச்சி டெக்சாசில் உள்ள இந்தியர்களிடம் வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சியாக இருந்ததுபோல் இது மாறிவிடக் கூடாது. அணுசக்தி, பாதுகாப்பு துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக இருக்க வேண்டும். இந்திய இறையாண்மை, சுயமரியாதை, நாட்டு நலனை முன்னிறுத்தும் வகையில் மோடி அரசு செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • twins22

    தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் இனி தனித்தனியே!: அறுவை சிகிச்சைக்கு பின் சந்தோஷமாக நாடு திரும்பினர்..!!

  • mumbaitrain22

    7 மாதத்திற்கு பிறகு மும்பை மின்சார ரயிலில் பெண்கள் உற்சாக பயணம்!: 4 மகளிர் சிறப்பு ரயில்களும் இயக்கம்..!!

  • dinosauregg22

    பெரம்பலூரில் தோண்ட தோண்ட கிடைத்த ‘டைனோசர்’ முட்டைகள்!: ஒன்னு இல்ல ரெண்டு இல்ல.. ‘மிரள’ வைத்த எண்ணிக்கை..வியப்பில் பொதுமக்கள்..!!

  • locusts22

    எத்தியோப்பியாவில் வெட்டுக்கிளிகள் அட்டகாசம்!: 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உணவு பயிர்கள் நாசம்..விவசாயிகள் வேதனை..!!

  • rainbowtree22

    உலக பொறியாளர்களின் கவனத்தை ஈர்த்த பிலிப்பைன்ஸ் ரெயின்போ ட்ரீ டவர்!: கண்கவரும் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்