இலங்கை உள்நாட்டு போரில் மனித உரிமை மீறல் புகார் குறித்த நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது : பிரதமர் ராஜபக்க்ஷே
2020-02-20@ 15:43:14

கொழும்பு : இலங்கை உள்நாட்டு போரின் போது, போர் குற்றம் நடத்தியதாக எழுந்த குற்றச் சாட்டில் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க முடியாது என்று பிரதமர் ராஜபக்க்ஷே அறிவித்துள்ளார். ராஜபக்க்ஷேவின் இந்த அறிவிப்பு உள்நாட்டு போரால் பாதிப்புக்கு உள்ளாகி நீதி விசாரணையை எதிர்நோக்கி உள்ள தமிழர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. விடுதலை புலிகளுடனான நீண்ட கால போர் கடந்த 2009ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. அப்போது இலங்கை அரசு மற்றும் அந்நாட்டு ராணுவம் மனித உரிமை மீறலில் ஈடுபட்டன என்பது சர்வதேச நாடுகளின் குற்றச் சாட்டாகும்.
இனப்படுகொலை நடத்தப்பட்டதாகவும் புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக இலங்கை பிரதிநிதிகளை உள்ளடக்கிய கலப்பு விசாரணைக் குழுவை அமைத்து ஐ.நா. அவையில் 2015ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய இலங்கை அரசும் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால் இந்த ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பிரதமர் ராஜபக்ஷே தற்போது அறிவித்துள்ளார். அதிபர் மைத்ரிபால சிவசேனாவின் ஆட்சியில் இனப்படுகொலைக்கான தடையங்கள் அழிக்கப்பட்டதாக பல்வேறு மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பின. இந்த நிலையில் கலப்பு விசாரணைக்குழுவிற்கு ஒத்துழைப்பு தர முடியாது என்று ராஜபக்ஷே அறிவித்துள்ளார்.
மேலும் செய்திகள்
அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்..! உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியாக உயர்வு: 21.64 லட்சம் பேர் உயிரிழப்பு
நாயிடம் பால் குடிக்கும் பூனைக்குட்டி..! வைரலாகும் வீடியோ...
இந்தியாவின் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ள ஆவலாக இருந்தேன்...ஆனால் கொரோனா என்னை தடுத்துவிட்டது : இங்கிலாந்து பிரதமர் உருக்கம்
உருமாறிய கொரோனாவையும் எதிர்க்கும்...! தற்போதுள்ள தடுப்பூசியை மேலும் வீரியம் மிக்கதாக உருவாக்க பரிசோதனைகள்: மாடர்னா நிறுவனம்
உலகத்தை மிரட்டி வரும் கொரோனா..! பாதிப்பு எண்ணிக்கை 10 கோடியை தாண்டியது: 21.48 லட்சம் பேர் உயிரிழப்பு
ஒரே நேரத்தில் 143 செயற்கைகோளை ஏவி உலக சாதனை படைத்தது ஸ்பேஸ்எக்ஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!