வண்ணாரப்பேட்டையில் 6வது நாளாக போராட்டம் அமெரிக்க அதிபருக்கு எதிராக கறுப்புக்கொடி: போராட்டக்காரர்கள் அறிவிப்பு
2020-02-20@ 00:21:35

சென்னை: வண்ணாரப்பேட்டையில் நேற்று 6வது நாளாக குடியுரிமை திருத்த சட்டம் உள்ளிட்டவற்றை நீக்க வலியுறுத்தி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 24ம் ேததி இந்தியா வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிராக கரும்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை நீக்க வலியுறுத்தி, கடந்த 14ம் தேதி வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமிய அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகள் பங்கேற்றனர்.
இங்கு கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதால், இஸ்லாமியர்களின் போராட்டம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதைத் தொடர்ந்து பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி ஆகிய பகுதிகளில் கடந்த 5 நாட்களாக பெண்கள் உள்பட ஏராளமான இஸ்லாமியர்களின் போராட்டம் இரவுபகலாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், 6-வது நாளாக நேற்றும் இஸ்லாமியர்களின் கண்டன கோஷங்களுடன் போராட்டத்தை தொடர்ந்தனர். வரும் 24ம் தேதி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரும்போது, அவருக்கு எதிராக கறுப்புக்கொடி ஏந்தி, இஸ்லாமியர்களின் சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும் என போராட்டக் குழுவை சேர்ந்த ஒருவர் கூறினார்.நடிகர் மன்சூர் அலிகான் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
மேலும் செய்திகள்
சசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்?: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.!!!
அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!
தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்