பெரும்பாக்கம் சௌமியா நகரில் வாலிபர் கொலையில் 2 பேர் கைது
2020-02-20@ 00:08:17

வேளச்சேரி: பெரும்பாக்கம் சௌமியா நகரில் வாலிபர் கொலை யில் 2 பேரை போலீசார் ஒடிசாவில் கைது செய்தனர். பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம் சௌமியா நகர் 3வது தெருவில் உள்ள பூங்கா அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலில் காயங்களுடன் இறந்து கிடப்பதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு கடந்த 17ம் தேதி தகவல் கிடைத்தது. போலீசார் சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததாவது: பூங்கா அருகே வீடு கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணியில் மேற்கு வங்கம், ஆந்திரா, திருவண்ணாமலை பகுதிகளை சேர்ந்த 6 பேர் தங்கி வேலை செய்ததும், அவர்கள் திடீரென தலைமறைவானதும் தெரிய வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் அழகு தலைமையில் 2 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். அப்போது கட்டிடத்திற்கு மேற்பார்வையாளராக இருந்த ஜல்லடியன்பேட்டையை சேர்ந்த பாண்டியன் (39) என்பவரை பிடித்து விசாரித்தனர். அப்போது சம்பவம் நடந்த அன்று செல்போன் திருட வந்த நபர் என சந்தேகப்பட்டு ஒருவரை தொழிலாளிகள் தாக்கியதாகவும், அவர் மயங்கி விழுந்ததால் தூக்கி சென்று பூங்கா அருகே படுக்க வைத்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து தொழிலாளிகளின் மொபைல் எண்களை ஆராய்ந்தபோது மேற்கு வங்காளத்தை சேர்ந்த முகம்மது செபதுல்லா இஸ்லாம் (35), சுக்மேன் (27) ஆகியோர் என தெரியவந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், திருநாவுக்கரசு, ராஜ் மற்றும் காவலர் இளங்கோ ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விமானம் மூலம் ஒடிசா சென்று முகமது செபதுல்லா இஸ்லாம், சுக்மேன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் விமானம் மூலம் நேற்று சென்னை அழைத்து வந்தனர்.
மேலும் செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை விமான நிலையத்தில் எலக்ட்ரீஷியன் கைது
அரசு ஊழியர் வீட்டில் 45 சவரன் திருட்டு
கோயில், சர்ச், வீடு உள்பட 8 இடங்களில் கொள்ளை: மர்ம நபர்கள் கைவரிசை
பேஸ்புக் மூலம் நட்பாக பழகி நூதன முறையில் வழிப்பறி: 4 பேர் கைது
வியாசர்பாடி காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு
தி.நகரில் உள்ள பிரபல நகை கடையில் 5 கிலோ தங்கம் திருட்டு: வடமாநில ஊழியருக்கு வலை
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு ரூ.80 கோடி செலவில் பீனிக்ஸ் பறவை வடிவில் நினைவிடம்
27-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
குடியரசு தின விழாவில் பாரம்பரியத்தை பறைசாற்றும் கண்கவர் நிகழ்ச்சிகள் :மாமல்லபுரம் கடற்கரை கோவில், ராமர் கோவில் அலங்கார ஊர்திகள் பங்கேற்பு!!
சாலைகளில் படுத்து மறியல்... மாட்டு வண்டி, டிராக்டர்கள், ஆட்டோக்களில் பேரணி : விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழர்கள் ஆவேசப் போராட்டம்!!
அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு, சாகசங்கள், பாரம்பரிய நடனங்களோடு குடியரசு தின விழா கோலாகலம் : விழாக்கோலம் பூண்டது மெரினா!!