டெல்லியில் நடைபெற்று வரும் கைவினைப் பொருள்காட்சிக்கு பிரதமர் மோடி திடீர் விசிட்: கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார்
2020-02-19@ 19:42:31

டெல்லி: டெல்லி ராஜ்பாத்தில் நடைபெற்று வரும் கைவினைப் பொருட்கள் கண்காட்சிக்கு பிரதமர் மோடி திடீரென வருகை தந்து ஆச்சரியப்படுத்தினார். மத்திய சிறுபான்மையினர் விவகாரத்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி ராஜ்பாத்தில், 'ஹூனர் ஹாட்' என்னும் கைவினைப் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 13ம் தேதி தொடங்கிய இந்த பொருட்காட்சி 23ம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்களை அதிகம் கவர்ந்துள்ள இந்த பொருள்காட்சிக்கு, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகை வந்த வண்ணம் உள்ளனர். நாடு முழுவதும் இருந்து பெண்கள் உள்பட கைவினைஞர்கள், கைவினை தொழிலாளர்கள் மற்றும் சமையல் நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்
இந்த பொருட்காட்சி அரங்கிற்கு இன்று பகல் திடீரென சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்த கைவினைப் பொருட்களை நேரில் பார்வையிட்டார். அங்கிருந்த கைவினைப் பொருட்கள் நுட்ப வேலைப்பாடுகளை கண்டு ரசித்தார். கைவினைக் கலைஞர்களிடம் இதுபற்றி ஆர்வமுடன் கேட்டறிந்தார். இசை கருவிகளை இசைத்தும் மகிழ்ந்தார். மேலும், பொருட்காட்சியில் அமைக்கப்பட்டிருந்த ஒரு உணவு கடையில் கடைக்கு முன்பு கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தபடி உணவருந்தினார் இது அங்குள்ள மக்களை மிகப்பெரிய வியப்பிற்கு உள்ளாக்கியது.
மேலும், அங்கு பிரதமர் மோடியுடன் பொதுமக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சிலர் பிரதமர் மோடிக்கு ஒவியங்களை பரிசு அளித்தனர். இவ்வளவு சிறப்பு மிக்க பொருள்காட்சிக்கு, பிரதமர் நரேந்திர மோடி இன்று வருகை தந்தது கைவினைக் கலைஞர்கள் மத்தியில் உற்சாகத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது.
மேலும் செய்திகள்
திருக்குறளை படித்து வருகிறேன், அதில் உள்ள ஆழமான கருத்துக்களைக் கண்டு வியக்கிறேன் : ராகுல் காந்தி ட்வீட் !!
உத்தரபிரதேச திருமண விழாவில் விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு எதிர்ப்பு: ஆட்டோவை கயிறு கட்டி இழுத்து காங். எம்.பி. சஷி தரூர் நூதன போராட்டம்.!!!
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கு தடுப்பூசி போட மருத்துவ சான்றிதழ் கண்டிப்பாக வழங்க வேண்டும்: மத்திய அரசு
ஜனநாயக திருவிழா ஆரம்பம்... தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணை இன்று மாலை வெளியீடு: மக்கள் ஆர்வம்!!
26-02-2021 இன்றைய சிறப்பு படங்கள்
புதுச்சேரியில் பிரதமர் மோடி : கருப்பு பலூன்கள் பறக்கவிட்டு மக்கள் எதிர்ப்பு.. #மோடியே திரும்பி போ ஹேஷ்டேக்கால் அலறிய ட்விட்டர்!!
பெட்ரோல், டீசல் விலையேற்றம்; எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மாறிய மம்தா பானர்ஜி!
3 சிறைகள்...38,000 கைதிகள்!: தொடர் சங்கலியாக வெடித்த கலவரத்தில் 80 கைதிகள் பலி..கதறும் குடும்பத்தினர்..!!
ரோமத்தின் எடை மட்டும் 35 கிலோ... 5 வருடங்களாக தவித்த செம்மறி ஆட்டுக்கு கிடைத்த மறுவாழ்வு..!!