உயிர்பலி வாங்க காரணமாக இருந்த டிக் டாக் ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்? போலீஸ் விசாரணை
2020-02-19@ 18:05:38

பண்ருட்டி: டிக்டாக் மூலம் உயிரிழந்த ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். செல்போனில் டிக்டாக் செயலியில் பாட்டுக்கு நடனமாடுவது, வசனத்துக்கு நடிப்பதை முழு நேரமும் சிலர் ஈடுபடுகின்றனர். அவரது அழகை புகழ்ந்தும், பாராட்டியும் கமென்ட்டுகள், லைக்குகள் வர ஆரம்பித்ததும். இன்னும் கொஞ்சம் ஆர்வத்துடன் அறை குறை ஆடையுடன் நடனமாடுவது, கிளாமராக நடிப்பது என பாதை மாறிப்போனது. இதற்கு அடிமையாகி பண்ருட்டி அடுத்த காடாம்புலியூரை சேர்ந்த ராஜேஸ்வரி என்ற இளம்பெண் தனது உயிரையே இழந்துள்ளார். கணவனே மனைவியை கொன்றது தெரியவந்தது.
இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில், டிக்டாக்கில் பாடல் பாடியும், பல ஆண்களுடன் சேர்ந்து நடித்த காட்சிகளையும் பதிவிட்டுள்ளார். இதனால், அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுவே கொலைக்கு முக்கிய காரணமாக இருந்தது. கொலை நடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு கூட டிக்டாக் வீடியோ ஒன்று ராஜேஸ்வரி வெளியிட்டுள்ளார் இதில் அவர் காதலர் தினத்தை வாழ்த்தி பதிவு போட்டுள்ளார். ராஜேஸ்வரியின் டிக்டாக் பதிவில் சுமார் 300க்கும் மேற்பட்ட பதிவுகள் இருந்துள்ளது. இதில் பல பதிவுகள் காதலை வெளிப்படுத்தும் விதமாகவும், படுகிளாமர்பாடலாகவும் இருந்தது.
ஒரு காட்சியில் சில இளைஞர்கள் அவரை பிடித்து படுக்கையில் போட்டு அமுத்துவது போன்ற காட்சிகளை பரவவிட்டு, அது ராஜேஸ்வரிதான் என கமெண்ட் போட்டுள்ளனர். இதன் உண்மை தன்மை குறித்தும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதன்காரணமாக தமிழகம் முழுவதுமாக ராஜேஸ்வரியின் டிக்டாக் செயலியின் ஐடியை கண்டுபிடித்து காட்சிகளை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனர். டவுன்லோடு செய்து சமூக வலைதளங்களில் பரவவிட்டு வருகின்றனர். அடுத்த கட்டமாக ராஜேஸ்வரியுடன் தொடர்பில் இருந்தவர்களை பிடித்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவருடன் படலுக்கு நடனம் ஆடும் இளைஞர்களையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்துள்ளனர்.
ராஜேஸ்வரியை கணவனை கொலை செய்ய தூண்டுதலாக இருந்ததாக அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய போலீசார் முயற்சித்து வருகின்றனர். இதற்காக அனைவரின் செல்போன் எண்கள்சேகரிக்கப்பட்டு, விசாரணை நடத்தப்படவுள்ளது.
சம்மந்தப்பட்ட இளைஞர்கள், ஆண்கள் இது போன்று வேறு யாருடன் தொடர்பில் இருந்து வருகின்றனர் என்பதை கண்டுபிடித்து சம்மந்தப்பட்டவர்களின் குடும்பத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்படவுள்ளது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, ‘’டிக்டாக் செயலியில் ராஜேஸ்வரியுடன் நடனமாடிய இளைஞர்களை விரைவில் விசாரிக்க உள்ளோம்’’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகள்
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா: கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாகர்கோவிலில் மாநகராட்சி பணியாளர்களுக்கு இன்று கொரோனா தடுப்பூசி: அச்சத்தை போக்க விழிப்புணர்வு பிரசாரம்
நாகர்கோவில் மாநகர பகுதியில் குப்பைகள் தரம்பிரித்து வழங்கப்படுகிறதா?..மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
கொடைக்கானல் மலைப்பகுதியில் ஆயுதப்பயிற்சி மேற்கொண்ட வழக்கில் 7 மாவோயிஸ்டுகள் விடுதலை..!!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிப்ரவரி 19ம்தேதி ரதசப்தமி உற்சவம் : ஒரே நாளில் 7 ரதங்களில் சுவாமி உலா
சமயபுரம் கோயிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்