பெரம்பூர் ரயில் நிலையம் அருகே அரசு நிலம் ஆக்கிரமிப்பு மாநகராட்சி கமிஷனர் ஆய்வு : நீதிமன்ற உத்தரவால் அதிரடி
2020-02-19@ 00:38:11

பெரம்பூர்: பெரம்பூரில் ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள அரசு நிலங்களை மாநகராட்சி ஆணையர் நேரில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கினார். பெரம்பூர் நெடுஞ்சாலையில் பெரம்பூர் ரயில் நிலையம் அருகில் அரசுக்கு சொந்தமான நிலம் தனியார் சார்பில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாகவும், அதை மீட்க உத்தரவிட வேண்டும் என கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேவராஜன் என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் சில தினங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தபட்ட இடம் அரசுக்கு சொந்தமானது என வருவாய் ஆவணங்கள் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 14ம் தேதி பெரம்பூர் தாசில்தார் தகவல் பெறும் உரிமை சட்டத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தபட்ட இடம் பொதுப்பணித்துறைக்கு சொந்தமானது என தெரிவித்துள்ளார்.
எனவே சென்னை மாநகராட்சி ஆணையர் சம்பந்தபட்ட இடத்தை ஆய்வு செய்து அது ஆக்கிரமிப்பு நிலம் என தெரியவந்தால் சட்டபடி அந்த நிலத்தை மீட்க வேண்டும். ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டியிருந்தால் அதை இடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த உத்தரவை அமல்படுத்தி வரும் 24ம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதனையடுத்து, நேற்று மதியம் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், மத்திய வட்டார துணை ஆணையர் ஸ்ரீ'தர், 6வது மண்டல செயற்பொறியாளர் நாச்சியார், உதவி செயற்பொறியாளர் ரங்கநாதன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சம்பந்தபட்ட இடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, அரசு நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இவர்கள், தங்களிடம் உள்ள ஆவணங்களை உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து சென்றனர்.
மேலும் செய்திகள்
சசிகலா விடுதலை குறித்து முக்கிய விவாதம்?: வரும் 22-ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!!!
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமைச்சர் காமராஜ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி: தனியார் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்.!!!
அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைக்க கோரிய மனு: தமிழக அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு.!!!
தமிழகத்தில் மேலும் 543 பேருக்கு கொரோனா; 09 பேர் பலி: மொத்த பாதிப்பு 8.31 லட்சமாக அதிகரிப்பு: சுகாதாரத்துறை அறிக்கை.!!!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் ஜன.27-ம் தேதி திறப்பு: தமிழக அரசு அறிவிப்பு
பெண்களை ஆபாச வீடியோ எடுத்த இளைஞர்கள் : புகார் கொடுத்தவர்களை மிரட்டிய அதிமுகவினர்... கோவையில் பரபரப்பு
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இளம் இந்திய அணி இமாலய வெற்றி :... வேற லெவல் சாதனை என குவியும் பாராட்டுக்கள்!!
கொரோனா வைரஸ் தாக்குதலால் ஸ்தம்பிக்கும் உலக நாடுகள்!: பலியானோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது..!!
தமிழகம் முழுவதும் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!: உற்சாகமுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் வருகை..!!
3டி முறையில் ஸ்கேன் செய்யப்பட்ட உலக அதிசயமான ஏசு கிறிஸ்து சிலை... உலகம் இதுவரை பார்த்திராத சிலையின் உள்புறக் காட்சிகள்!!
19-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்