SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்துவது மக்கள் நலனுக்கு விரோதமானது : மத்திய அரசுக்கு ஜெயலலிதா கண்டனம

2013-07-23@ 11:01:09

சென்னை: தொலைத் தொடர்பு, காப்பீடு உள்ளிட்ட முக்கிய துறைகளில் அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்த மத்திய அரசு எடுத்துள்ள முடிவிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். வரலாறு காணாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு வீழச்சியடைந்தற்கு மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையே காரணம் என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் நாட்டின் பெருமைக்கு பெருத்த அடி விழுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதனால் பண வீக்கம் அதிகரிப்பதுடன் விலைவாசி உயர்வால் சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்த முக்கிய துறைகளில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பை உயர்த்துவது மக்கள் நலனுக்கு விரோதமானது என்று ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார். தொலைத் தொடர்புத் துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை உயர்த்துவது நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மக்கள் நலனுக்கு மாறாக வெளிநாட்டு தர நிர்ணய முகமையின் மிரட்டலுக்கு அஞ்சி அந்நிய முதலீட்டு வரம்பை அதகரிக்கும் நடவடிக்கை மத்திய அரசு இறங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கைகள் இந்திய அரசின் பலவீனத்தை காட்டுவதாக என்று கூறியுள்ள ஜெயலலிதா, இத்தகைய குறுகிய நோக்கத்திலான கொள்கைகளால் இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்த முடியாது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அந்நியச் செலாவனி சந்தையில் நிலவும் ஊக பேரத்தை ஒழித்தால் மட்டுமே இந்திய ரூபாயின் மதிப்பு உயரும் என்று அவர் யோசனை தெரிவித்துள்ளார்.

venlafaxine forum click venlafaxine 150
plavix tonydyson.co.uk plavix plm
generic for crestor 20 mg crestor rosuvastatin 10 mg price crestor.com coupons

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ambedkar

    சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

  • AIADMK

    பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

  • animal-snake-6

    சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

  • trichy 06

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

  • sandart-18----

    ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்