மகாத்மா காந்தியின் விருப்பம்: நாடு முழுவதும் மதுவிலக்கு...மதுபானம் இல்லாத இந்தியா’ குறித்த மாநாட்டில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பேச்சு
2020-02-17@ 20:58:41

புதுடெல்லி: நாடு முழுவதும் மதுவிலக்கை அமலுக்கு கொண்டு வரவேண்டும் என்று பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார். டெல்லியில் ‘மதுபானம் இல்லாத இந்தியா’ குறித்த மாநாட்டில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: நாடு தழுவிய அளவில் மதுவை தடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட சில மாநிலங்களில் மட்டுமல்ல; அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்த வேண்டும். இது மகாத்மா காந்தியின் விருப்பம்; மதுபானம் உயிர்களை அழிக்கிறது. கடந்த காலங்களில் நாட்டில் மதுவிலக்கு அமலில் இருந்தது.
ஆனால் படிப்படியாக பல மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டன. இது பீகாரில் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரால் திணிக்கப்பட்டது. ஆனால், அவர் அதை முழுமையாக செயல்படுத்தவில்லை. 2011ல் பீகாரில் மதுவிலக்கு விதிக்கத் திட்டமிட்டது. இறுதியாக 2016ம் ஆண்டில் அதனை அமல்படுத்தினோம். அதன் தொடர்ச்சியாக பல கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. மதுவிலக்கை உறுதி செய்யும் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் செயல்முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
Tags:
மகாத்மா காந்தி நாடு முழுவதும் மதுவிலக்கு மதுபானம் இல்லாத இந்தியா மாநாடு பீகார் முதல்வர் நிதிஷ் குமார்மேலும் செய்திகள்
மருத்துவ மேற்படிப்பு கலந்தாய்வை மேலும் ஒருவாரம் நீட்டிக்க அனுமதி கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு..!!
இந்தியாவில் 2-ம் கட்டமாக தடுப்பூசி செலுத்தும் போது மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள உள்ளதாக தகவல்?
சட்டவிரோத கட்டுமான வழக்கில் நடிகர் சோனு சூட் மனு தள்ளுபடி.: மும்பை ஐகோர்ட் உத்தரவு
கொரோனா இருக்கிறதா? இல்லையா!: சி.டி. ஸ்கேன் பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படும் சசிகலா..!!
ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறதா பாஜக!: காவல்துறையால் தேடப்படும் புதுச்சேரி பெண் தாதா எழிலரசி பா.ஜ.க-வில் இணைந்தார்..!!
அச்சப்பட தேவை இல்லை...சசிகலாவிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.: டிடிவி தினகரன் பேட்டி
21-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்
உலகின் மிக நீளமான நகங்களைக் வளர்த்திருக்கும் பெண்மணி!!!
குஜராத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் குழந்தை உட்பட 16 பேர் உடல் நசுங்கி பலி..!!
ஒடிசா கடற்கரையில் மணற் சிற்பக் கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் அமைத்துள்ள கண்கவர் மணற் சிற்பங்கள்!!
20-01-2021 இன்றைய சிறப்பு படங்கள்