SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிரைவர் இல்லாத கார்!

2020-02-17@ 17:21:04

நன்றி குங்குமம் முத்தாரம்

ஹாலிவுட் படங்களிலும், சயின்ஸ் ஃபிக்சன் நாவல்களிலும் இடம்பெறும் ஆச்சர்யமான  விசயம் டிரைவர் இல்லாத கார். ரோபோ கார், தானோட்டி கார் என பல பெயர்களிலும் இந்தக் கார் அழைக்கப்படுகிறது.  திரைப்படத்தில் சாத்தியமான டிரைவர் இல்லாத காரை நிஜத்திலும் கொண்டுவர பல நிறுவனங்கள் முயற்சி செய்துவருகின்றன. சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக இந்தக் காருக்கான ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. உலகம் முழுவதும் நடக்கும் விபத்துகளில் வருடந்தோறும் லட்சக்கணக்கானோர் மரணமடைகின்றனர். ஆயிரக்கணக்கானோர் உடல் உறுப்புகளை இழக்கின்றனர். பலர் படுகாயம் அடைகின்றனர்.

இந்த விபத்துகளைத் தடுப்பதே டிரைவர் இல்லாத காரின் முக்கிய நோக்கம். சமீபத்தில் ‘கூகுள்’, ‘வோக்ஸ்வேகன்’ நிறுவனங்கள் டிரைவர் இல்லாத காரை உருவாக்கி முன்னோட்டம் விட்டிருந்தன. இந்த முன்னோட்டம் தோல்வி யடைந்து இரண்டு பேர் விபத்தில் இறந்தனர். இதனால் இந்தக் கார்களைக் குறித்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. செயற்கை நுண்ணறிவின் மூலம் இயங்கும் இக்கார்களுக்கு உரிய சாலை விதிகளை உருவாக்கி வருகிறது ஒரு அமைப்பு. அதன்படி டிரைவர் இல்லாத கார் அலட்சியமாக இயங்குவதை தவிர்க்க வேண்டும். முரட்டுத்தனமாக செல்லக்கூடாது.

நூறு சதவீதம் மோதலைத் தவிர்க்க வேண்டும். மனிதனைவிட விவேகமாக வாகனத்தை ஓட்டும் திறன் செயற்கை நுண்ணறிவுக்கு இருக்க வேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு கார் வடிவமைக்கப்பட வேண்டும். இன்னும் இரண்டு வருடங்களில் டிரைவர் இல்லாத கார் விற்பனைக்கு வர வாய்ப்பிருக்கிறது. அதற்குள் டிரைவர் இல்லாத காரில் உள்ள குறைகளை எல்லாம் நிறுவனங்கள் சரி செய்ய வேண்டும்.

தொகுப்பு: க.கதிரவன்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 30-09-2020

    30-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • formars29

    வேளாண் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் வெடித்தது போராட்டம்!: இந்தியா கேட் அருகே டிராக்டரை தீயிட்டு எதிர்ப்பு..!!

  • coronadeath29

    கொரோனாவின் பிடியில் சிக்கி தவிக்கும் உலக நாடுகள்!: கொடிய தொற்றுக்கு பலியானோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டியது..!!

  • thee29

    பற்றி எரியும் காட்டுத்தீயால் கண்ணீரில் தத்தளிக்கும் கலிபோர்னியா மாகாணம்!: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு..!!

  • vadothara29

    குஜராத் மாநிலம் வதோதராவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 3 தொழிலாளர்கள் பலி!: 10 பேர் இடிபாடுகளில் சிக்கினர்!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்