SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேற்குவங்கத்தில் பொதுத்தேர்வுகள் முடியும் வரை ஒலிப்பெருக்கிக்குத் தடை: மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு

2020-02-17@ 12:57:00

கொல்கத்தா: பொதுத்தேர்வுகளை முன்னிட்டு ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்படுவதாக மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் உயர்நிலை வகுப்புகளுக்கான தேர்வுகள் பிப்ரவரி 18-ம் தேதி தொடங்குகின்றன. அதேபோல மேல்நிலை வகுப்புத் தேர்வுகள் மார்ச் 12-ம் தேதி தொடங்குகின்றன. இரண்டு தேர்வுகளும் மார்ச் 27-ம் தேதி வரை நடைபெறுகின்றன. இதை முன்னிட்டு மேற்கு வங்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; தேர்வுக்கு 3 நாட்கள் முன்னதாகவே இந்தத் தடை அமலுக்கு வருகிறது. அனைத்துப் பொதுத் தேர்வுகளும் முடியும் வரை ஒலிப்பெருக்கிகளுக்கான தடை நடைமுறையில் இருக்கும். வீட்டுப் புறங்கள், பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதற்கான தடை அமல்படுத்தப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் பொதுத் தேர்வுகளின்போது ஒலிப்பெருக்கிகளுக்குத் தடை விதிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாணவர்கள் தொந்தரவின்றிப் படிக்க முடிவதாக பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-09-2020

    24-09-2020 இன்றைய சிறப்பு படங்கள்

  • mumbairain23

    விடாத கனமழையால் தண்ணீரில் மிதக்கும் மும்பை மாநகரம்!: சாலையில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு..!!

  • ele23

    தென் ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் நஞ்சு உருவான நீரைப் பருகிய 300க்கு மேற்பட்ட யானைகள் திடீர் பலி!: ஆய்வாளர்கள் அதிர்ச்சி..!!

  • ast23

    ஆஸ்திரேலியாவின் டாஸ்மானியா கடற்கரையில் கொத்து கொத்தாய் கரை ஒதுங்கிய திமிங்கலங்கள்!: மணலில் சிக்கி உயிருக்கு போராட்டம்..!!

  • chinacrob23

    சீனாவின் வயல்களில் நெற்பயிர்களுடன் வளர்க்கப்படும் நண்டுகள்!: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த புது யுக்தி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்